»   »  தாமி... இது செல்ஃபியின் பாதிப்பால் உருவாகும் படம்!

தாமி... இது செல்ஃபியின் பாதிப்பால் உருவாகும் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய இளைய தலைமுறையை மட்டுமல்ல, முந்தைய தலைமுறையையும் ஒரு நோயாகப் பீடித்துக் கொண்டுள்ள வியாதியாகிவிட்டது செல்ஃபி எடுத்துக் கொள்வது.

மலை உச்சியில், ஓடுகிற ரயிலுக்கு முன்பாக, அணைக்கட்டின் நின்றபடி செல்ஃபி எடுக்கப் போய் மரணத்தைத் தழுவிய கதைகள் நிறையவே வந்துவிட்டன.

இந்த செல்ஃபி பாதிப்பை வைத்து ஒரு படம் உருவாகிறது. படத்துக்கு தாமி என்று பெயர் வைத்துள்ளனர். செல்ஃபி என்பதன் தமிழ் தலைப்புதான் தாமி-யாம்!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர் பிரவீண் புதுமுகம். யாரிடமும் உதவியாளராகக் கூட பணியாற்றாதவர்.

ஷங்கரின் படங்கள் பார்த்தும், நண்பர் தயாரித்த படத்தின் ஷூட்டிங் பார்த்தும் சினிமா கற்ற இந்த விஸ்காம் இளைஞர், சென்னை அருகே திருவள்ளூர்க்காரர்.

படம் குறித்து பிரவீண் என்ன சொல்கிறார்?

"செல்ஃபி ஆசை இல்லாதவர்களே இல்லை இன்றைக்கு. ஆனா செல்ஃபியால பல பேர் செத்துக்கிட்டு இருக்கிறதை பேப்பர்ல படிக்கிறோம். செல்ஃபி எடுத்துக்கிறது தப்பு இல்லைனாலும், அதனால வர்ற பாதகங்களையும் நாம தெரிஞ்சுக்கணும். ‘செஃல்பி'யை அடிப்படையா வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு தோணவே, ‘தாமி'யை ஆரம்பிச்சுட்டோம்.

ஹாலிவுட் பாணியில் மூன்றே மூன்று கேரக்டர்களை வைத்து, இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் வராத மாதிரி காட்சிகளுடன் இந்த தாமியை உருவாக்கியுள்ளேன்," என்றார்.

படம் பார்த்து முடிக்கும்போது, செல்ஃபி என்ற பெயரில் நாம் செய்த தவறுகள் புரியும்படி திரைக்கதை அமைத்துள்ளாராம் பிரவீண்.

பார்த்துட்டா போச்சு!

Read more about: thaami, selfie, தாமி
English summary
Thaami is a new movie directed by newcomer Praveen based on the side effects of selfie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil