»   »  தெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்?

தெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைப்புலி எஸ்.தாணுவுக்கு இந்த ஆண்டு ரொம்ப்ப்ப்ப்பவே ஸ்பெஷல். ரஜினியின் மூன்றாவது படத்திலிருந்தே அவர் எதிர்பார்த்து காத்திருந்த ரஜினி படத் தயாரிப்பு என்ற அவரது கனவு இதோ நிறைவேறி படம் ரிலீஸ் வரை வந்துவிட்டது.

விஜய்யை வைத்து அட்லீ இயக்கத்தில் தயாரித்த தெறி படமும் வெற்றியடைந்துவிட்டது. கபாலி ரிலீஸ் தேதியான ஜுலை 22 ஆம் தேதிதான் தெறி படத்துக்கு 100 வது நாள். அந்த வகையில் ஜுலை 22 தாணுவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

Thaanu to celebrate Theri 100 day with Kabali success

தாணுவின் படங்களின் வெற்றிவிழா எப்போதுமே களை கட்டும். இந்த முறை கபாலி ரிலீஸில் பிஸியாக இருப்பதால் தெறி விழாவை தள்ளிவைத்து கபாலியுடன் சேர்த்து இரண்டு படங்களின் வெற்றி விழாவாக கொண்டாடலாம் தாணு. அநேகமாக ரஜினியையும் விஜய்யையும் ஒரே மேடையில் பார்க்கலாம்.

தாணுவின் மகன் இயக்கத்தில் உருவான இந்திரஜித் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

English summary
Producer Kalaipuli Thaanu is planning to celebrate Theri 100 day function with Kabali success meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil