இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
சென்னை: ஒருவர் தங்களில் வாழ்க்கையில் எத்தனையோ தீபாவளியை கடந்து சென்றாலும், திருமணமான முதல் வருடம் கொண்டாடப்படும், தலை தீபாவளி ரொம்ப ஸ்பெஷல். அப்படி இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா ஜோடியின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமா மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டு காதலனான ஆண்டனி தட்டிலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற திருமணத்தில் இதில் விஜய், திரிஷா, அட்லீ உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த ஜோடிக்கும் இது தான் தலை தீபாவளி.

நாகசைத்தன்யா: தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் நாக சைத்தன்யா,இவர் சமந்தாவுடன் இணைந்து 'ஏ மாய சேசாவே' திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும், 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஐந்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் 2021ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் சினிமாவில் கவனத்தை செலுத்தி நடித்து வந்த நாக சைத்தன்யா, இரண்டாவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

சாக்ஷி அகர்வால்: தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி தனது நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஜனவரி 2-ம் தேதி கோவாவில் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். சாக்ஷி அகர்வால் - நவ்னீத் மிஸ்ரா ஜோடி இந்த ஆண்டு தங்களின் தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

ரம்யா பாண்டியன்: டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த போட்டோவில் இடையழகை காட்டி, லைக்குகளை பெற்ற ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் புகழின் உச்சத்தில் இருந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யோகா மாஸ்டரான லவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் நடைபெற்றது. இந்த தம்பதிகளும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
ஐசரி கணேஷின் மகள்: கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனம். ஏகப்பட்ட படங்களை தயாரித்துவரும் அந்நிறுவனத்தை ஐசரி கணேஷ் வழிநடத்தி வருகிறார். இவரின் மகள் ப்ரீத்தா, லஷ்வின் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் மே மாதம் சென்னையில் உள்ள நீலாங்கரை தனியார் கன்வென்ஷன் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ப்ரீத்தா, லஷ்வின் ஜோடியும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.


Click it and Unblock the Notifications











