முடிவுக்கு வந்த தலைவர் 169 விவகாரம்... நெல்சனுக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்
சென்னை : பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றத்தை தந்ததால், நெல்சன் அடுத்து இயக்க போகும் தலைவர் 169 படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த பிரச்சனையை ரஜினியே முடிவுக்கு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார் என்றதும் அவரை ஆஹா, ஓஹோ என பலரும் புகழ்ந்தனர். பீஸ்ட் ரிலீசாவதற்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை அவர் தான் இயக்குகிறார் என்றதும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போனது. ஆனால் பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சும் சம்பந்தமே இல்லாமல் போனதால் தலைவர் 169 வாய்ப்பு நெல்சனை விட்டு போய் விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.

தலைவர் 169 டைரக்டர் மாற்றமா
பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு ரஜினி அப்செட்டாகி விட்டதாகவும், இதனால் தலைவர் 169 டைரக்டரை மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் தலைவர் 169 படத்தை யார் இயக்க வாய்ப்புள்ளது என்ற கேள்வியை எழுப்பி, அட்லி இயக்க போகிறார், தேசிங்கு பெரியசாமி இயக்க போகிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்க வாய்ப்பு என கூறினார்கள்.

நெட்டிசன்களின் வேண்டாத வேலை
இதற்கிடையில் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தலைவர் 169 பெயரை நீக்கி விட்டதாக வேண்டாத போட்டோஷாப் வேலைகளை செய்தி, சோஷியல் மீடியாவில் பரவ விட்டனர் நெட்டிசன்கள். ஆனால் உண்மையில், தற்போது வரை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதுவரை தலைவர் 169 பெயரை நீக்கவில்லை.

டைரக்டரா மாற்றி விட்டார்களா
ஆனால் லேட்டஸ்டாக கிடைத்துள்ள தகவலின் படி, தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சன் மாற்றப்படவில்லை. நெல்சன்-ரஜினி-சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தான் தலைவர் 169 உருவாக போகிறது. ஏற்ற, இறக்கம் என்பது சகஜம். ஒரு படத்தை வைத்து ஒருவர் இயக்கும் அனைத்து படங்களையும் முடிவு செய்து விட முடியாது என படக்குழு தரப்பில் இருந்த கூறப்படுகிறது. ரஜினி, பீஸ்ட் படத்தை பார்த்து அப்செட் ஆனது உண்மை தானாம். அதற்காக டைரக்டரை மாற்றும் அளவிற்கு போகவில்லையாம்.
Recommended Video

ரஜினி கொடுத்த அட்வைஸ்
மாறாக நெல்சனிடம் கதையில் சில மாற்றங்களை செய்ய ஆலோசனை வழங்கி உள்ளாராம். நெல்சனும் இதற்காக ரஜினியிடம் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளாரதாம். தலைவர் 169 படத்திற்கு இறுதியான கதை, திரைக்கதையை நெல்சன் தயார் செய்து, அது ஓகே ஆனதும் ஜுலை மாதம் முதல் திட்டமிட்டபடி தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். மொத்தத்தில் தலைவர் 169 படத்தை நெல்சன் தான் இயக்க போகிறார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது மட்டும் கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











