தளபதி 66 க்கு இப்படி ஒரு அப்டேட்டா... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

சென்னை : விஜய்யின் தளபதி 66 படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வந்த இந்த அப்டேட்டால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். இப்படி ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளியுடன் விஜய் முதல் முறையாக இணைந்துள்ள படம் இது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

 தளபதி 66 ஷுட்டிங் எப்போ

தளபதி 66 ஷுட்டிங் எப்போ

தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் இந்த வாரம் துவங்கப்பட உள்ளதாம். ஆரம்ப கட்ட ஷுட்டிங் சென்னையில் ஒரு வாரம் நடத்தப்பட உள்ளதாம். முதல்கட்டமாக விஜய், ராஷ்மிகா பங்கேற்கும் பாடல் காட்சிகளை முதலில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

 அட செம அப்டேட்டா இருக்கே

அட செம அப்டேட்டா இருக்கே

முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை ஈசிஆரில் உள்ள ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது வரை சரத்குமார் நடிப்பது உறுதியாகி உள்ளது. விரைவில் படக்குழு பற்றிய முழு விபரங்களும் வெளியிடப்பட உள்ளதாம். கார்த்திக் பழனி ஒளிப்பதிவையும், பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளையும் கவனிக்க உள்ளனராம். பாடல் வரிகளுடன், எக்ஸ்ட்ரா திரைக்கதை எழுத்து மற்றும் வசனங்கள் ஆகியவற்றையும் விவேக் எழுத போகிறாராம்.

விஜய்யுடன் முதல் படம்

விஜய்யுடன் முதல் படம்

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா பேனரில் தயாரிக்க உள்ளனர். தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம்.

விஜய்க்கு இரண்டு ஹீரோயின்களா

விஜய்க்கு இரண்டு ஹீரோயின்களா

தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் இந்த படத்தில் ராஷ்மிகாவுடன் மற்றொரு ஹீரோயினும் நடிக்க போகிறாராம். நிஜமாகவே விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா, அந்த மற்றொரு ஹீரோயின் யார், தளபதி 66 படத்தின் டைட்டில் என்ன என்பதை விரைவில் படக்குழு வெளியிட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X