தளபதி 66 லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்...விஜய்க்கு வில்லனாகும் மற்றொரு டாப் ஹீரோ

சென்னை : விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக டாப் ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதோடு படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்க உள்ளது என்பது பற்றிய அப்டேட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், வழக்கமான வில்லன் நடிகர்கள் இல்லாமல் டாப் ஹீரோ ஒருவரை, மற்றொரு டாப் ஹீரோவிற்கு வில்லனாக நடிக்க வைத்து வருகிறார்கள். பிரசன்னா, அரவிந்த்சாமி, ஃபகத் ஃபாசில் என பலரும் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக அறிமுகம் செய்து, பெரும் வரவேற்பை பெற்றார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

வில்லனாகும் ஹீரோக்கள்

வில்லனாகும் ஹீரோக்கள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் பிடித்திருந்ததால், கமலின் விக்ரம் படத்திலும் அவரையே வில்லனாக புக் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கு விஜய் சேதுபதி என்றால், வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக புதிய நபர் ஒருவரை வில்லனாக்க வேண்டும் என முடிவு செய்து தெலுங்கு ஹீரோ கார்த்திகேயாவை புக் செய்தனர். இதைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் விஜய்க்கு வில்லனாக டைரக்டர் செல்வராகவனை நடிக்க வைத்தனர். ஆனால் தற்போது செல்வராகவன் வில்லன் ரோலில் நடிக்கவில்லை என்றும், அவர் அரசியல்வாதி ரோலில் தான் நடித்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

இறுதிக்கட்டத்தில் பீஸ்ட் வேலைகள்

இறுதிக்கட்டத்தில் பீஸ்ட் வேலைகள்

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. படத்தில் ஏப்ரல் 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டீசர் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதால் மிக விரைவில் பீஸ்ட் டீசரும் வெளியிடப்பட உள்ளது. இதனால் தற்போது அனைவரின் கவனமும் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் மீது திரும்பி உள்ளது. விஜய்யின் முதல் பைலிங்குவல் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

எதிர்பார்ப்பை கிளப்பிய தளபதி 66

எதிர்பார்ப்பை கிளப்பிய தளபதி 66

தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க போகும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இது ஒரு வித்தியாசமான கதை, பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் வரிசையில் விஜய்க்கு மற்றொரு பிரேக் கொடுப்பதாக இந்த படம் அமையும் எனவும், 2022 ம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தில் ராஜு ஏற்கனவே கூறி இருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா விஜய்யின் மகளாக நடிக்க போவதாகவும், பிரகாஷ்ராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இவர் தான் விஜய்க்கு வில்லனா

இவர் தான் விஜய்க்கு வில்லனா

லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லன் கிடையாதாம். பிரபல தெலுங்கு டாப் ஹீரோ நானி தான் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போகிறாராம். தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். அதற்கு முன் ஹீரோயின், டைட்டில் போன்றவைகள் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்க போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X