அடிதூள்...விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா...தளபதி 66 ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு

சென்னை : விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கிற்கு முன்பே தளபதி 66 படமும் ஆரம்பமாயிடுச்சு. இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசாகும் ஏப்ரல் 13 ம் தேதிக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதே சமயம் பீஸ்ட் படத்தில் சர்ச்சைக்குரிய சீன்களை வைத்து அந்த படத்தை எதிர்க்கவும் பீஸ்ட் ரிலீசிற்காக சில அமைப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

தளபதி 66 பூஜை

தளபதி 66 பூஜை

ரசிகர்கள் பீஸ்ட் திருவிழாவிற்காக தயாராகி வரும் நிலையில் இன்று சென்னையில் தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் வம்சி பைடபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். மிக எளிமையாக நடைபெற்ற இந்த பூஜையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜை போட்டோ தற்போது வெளியாகி செம டிரெண்ட் ஆகி வருகிறது.

இவர் தான் ஹீரோயின்

இவர் தான் ஹீரோயின்

தளபதி 66 படத்தின் ஹீரோயின் யார் என்பது கடந்த சில நாட்களாகவே பெரிய குழப்பமாக போய் கொண்டிருந்தது. இதற்காக கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, திஷா பதானி, கிருத்தி சனோன் என பல நடிகைகளின் பெயர்கள் சொல்லப்பட்டது. கடைசியாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா தான் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. பூஜையில் அவர் கலந்து கொண்ட போட்டோவும் அதை கன்ஃபார்ம் செய்துள்ளது.

எப்போ ஷுட்டிங்

எப்போ ஷுட்டிங்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுவதால் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் ரிலீசிற்கு பிறகு தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷுட்டை விஜய் ஏற்கனவே முடித்து விட்டதால் ஏப்ரல் கடைசி வாரத்தில் ஷுட்டிங் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

விரைவில் டைட்டில் அறிவிப்பா

விரைவில் டைட்டில் அறிவிப்பா

ஷுட்டிங் துவங்கியதும் தளபதி 66 படத்தின் டைட்டில், மற்ற படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது வித்தியாசமான கதை, கடந்த 20 ஆண்டுகளில் விஜய் நடிக்காத கதை என சொல்லப்படுவதால் தளபதி 66 படத்தின் கதை என்ன, யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தளபதி 66 பூஜையை முன்னிட்டு Thalapathy66 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X