விஜய் ஃபேன்சுக்கு அடுத்த ட்ரீட் ரெடி...தளபதி 66 ஷுட்டிங் எப்போ ஆரம்பமாகுது தெரியுமா?

சென்னை : பீஸ்ட் பட கொண்டாட்டம் முடிவதற்குள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த தளபதி 66 படமும் வந்து கொண்டிருக்கிறது. தளபதி 66 படத்தின் ஷுட்டிங் அப்டேட்கள் வெளியாக துவங்கி விட்டன.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீசை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்ஷன் காமெடி, த்ரில்லர் படமான பீஸ்ட் படம் ரிலீசானதும் விஜய், அடுத்த படமான தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கை துவக்குவார் என ஏற்கனவே கூறப்பட்டது.

விஜய்யின் தெலுங்கு என்ட்ரி

விஜய்யின் தெலுங்கு என்ட்ரி

தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி 66 படத்தை இயக்க உள்ளார், பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் விஜய், டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க போகிறார். அதனால் ரசிகர்கள் இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி 66 ஷுட்டிங் எப்போ

தளபதி 66 ஷுட்டிங் எப்போ

ஏப்ரல் மாதத்தில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கும் என கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 66 என தற்காலிகளாக பெயரிடப்பட்டுள்ள தனது 66 வது படத்திற்கான டெஸ்ட் ஷுட்டை சில நாட்களுக்கு முன் தான் விஜய் முடித்தாராம். படத்தின் ஷுட்டிங் இந்த வாரம் துவங்கப்பட உள்ளதாம். முதல் கட்ட ஷுட்டிங் சில நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாம்.

விரைவில் டைட்டில் அறிவிப்பு

விரைவில் டைட்டில் அறிவிப்பு

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, ராஷ்மிகா திஷா பதானி, கிருத்தி சனோன் நடிக்கிறார் என பல நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தளபதி 66 ல் விஜய்க்கு ஜோடி யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோயின் போன்ற அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தளபதி 66 வில்லன் இவரா

தளபதி 66 வில்லன் இவரா

தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்காக விஜய்க்கு மட்டுமல்ல விவேக் ஓபராய்க்கும் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X