தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!

சென்னை: நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே எப்படியாவது காட்சிகளும் தகவல்களும் லீக் ஆகிவிடும். இந்நிலையில், அந்த வேலையை தயாரிப்பு தரப்பே அதிகாரப்பூர்வமாக செய்து விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருவதாகவே தெரிகிறது.

அப்டேட் வேணுமா அப்டேட் இருக்கு என தொடர்ந்து ரசிகர்கள் திக்குமுக்காடும் அளவுக்கு அப்டேட்களை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டு தளபதி ஃபேன் பாய் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது.

சமீபத்தில், ஸ்பைஸ் ஜெட்டில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் சென்ற தகவல்கள் லீக் ஆன நிலையில், இந்தாங்க முழு வீடியோவையே பாருங்க என அதிகாரப்பூர்வமாகவே காஷ்மீருக்கு பயணப்பட்ட விமான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தனி விமானம்

பொதுவாக நடிகர்கள் சினிமா ஷூட்டிங் மற்றும் சுற்றுலா செல்ல தனி விமானங்களை பயன்படுத்துவது இயல்பான ஒன்று தான். ஆனால், முதல் முறையாக படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் படக்குழு பறக்கும் காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது இதுதான் ஃபர்ஸ்ட் டைம் என்றே சொல்லலாம்.

விமானத்தில் விஜய்

விமானத்தில் விஜய்

தளபதி 67 பட லுக்குடன் நடிகர் விஜய் ஒட்டுமொத்த படக்குழுவுடன் தனி விமானத்தில் பறந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. விமானத்தில் அனைவரும் அமர்ந்து விட்டனரா என்றும் அனைவரையும் அவர்கள் இருக்கைக்கே சென்று சந்தித்து பேசுவது, குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது, விஜய்யே வீடியோ எடுப்பது என விமான வீடியோ விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்டாக கிடைத்து பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.

பக்கத்தில் த்ரிஷா

பக்கத்தில் த்ரிஷா

நடிகர் விஜய்க்கு பக்கத்திலேயே ஹீரோயின் த்ரிஷாவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. பட பூஜையில் இருந்த குழந்தையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறது போல, அந்த குழந்தையுடன் நடிகர் விஜய் கொஞ்சி விளையாடுகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இத்தனை பேரை கூட்டிக் கொண்டு காஷ்மீரில் படத்தை இயக்கப் போகும் உற்சாகத்தில் இருப்பதை காண முடிகிறது.

ஏஜென்ட் டினா இருக்காங்க

ஏஜென்ட் டினா இருக்காங்க

தளபதி 67 படக்குழுவுடன் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாக ஏஜென்ட் டினாவும் விமானத்தில் ஏறி பயணம் செய்த வீடியோ வெளியான நிலையில், இந்த படம் கண்டிப்பாக எல்சியூ தான் என்றும் ஏஜென்ட் டினாவின் பேக் ஸ்டோரியாக ஒருவேளை இருக்குமா அல்லது இந்த படத்தில் லோகேஷ் நடிகை வசந்திக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

எல்சியூவா இல்லையா

எல்சியூவா இல்லையா

தளபதி 67 படம் கண்டிப்பாக எல்சியூ தான் என ஒரு பக்கம் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர். மறுபக்கம் ஸ்டாண்ட் அலோன் படமாக பிரம்மாண்டமாக உருவாகப் போவதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் பட பூஜையில் தென்பட்ட நிலையில் தற்போது ஏஜென்ட் டினாவும் ரசிகர்கள் கண்களில் சிக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X