Don't Miss!
- Sports
மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட்.. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.. புதிய சாதனை
- News
மதுரை பெரியார் நிலையம் வேண்டாம்.. மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் : பாஜக தீர்மானம்!
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இனி ‘தளபதி 67‘ தான்...வாரிசு படம் பார்த்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
சென்னை : வாரிசு திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களோடு கண்டு ரசித்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், செல்வராகவன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சன் இப்படத்தை இயக்கியதால், அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் பீஸ்ட் படத்திற்காக காத்திருந்தனர்.
அவதார்,
டாப்
கன்
வரிசையில்
ஆர்ஆர்ஆர்...
கோல்டன்
குளோப்
முழுமையான
விருது
பட்டியல்
இதோ...

மோசமான விமர்சனம்
பீஸ்ட் திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மோசமான விமர்சனங்களை பெற்றது. சோஷியல் மீடியாவில் படத்தை ட்ரோல் செய்யும் அளவுக்கு சென்றது. பீஸ்ட் தோல்வி படம் என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் 150 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூலானது. இருந்தாலும், பல நெகடிவ் விமர்சனங்களால் நொந்துப்போன பேன்ஸ் விஜய்யின் அடுத்தப்படத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

தளபதியின் வாரிசு
இதையடுத்து,பல வெற்றிப்படங்களை கொடுத்த வம்சியின் இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில், சரத்குமார், ஷியாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ்,ராஷ்மிகா, குஷ்பு,எஸ்ஜே சூர்யா என பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப கதை
அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு விஜய் வீட்டைவிட்டு வெளியேறிய பின் வில்லன் பிரகாஷ் ராஜால் பிஸ்னசும்,குடும்பமும் நிலைகுலைந்து போகிறது. இதை கேள்விபட்டு மீண்டும் வீட்டிற்கு வருகிறார் விஜய். பின்பு என்ன ஆனது என்பதுதான் வாரிசு படத்தின் மீதி கதை. குடும்ப உறவுகளை கவரும் குடும்ப செண்டிமென்ட் படமாக இருந்தாலும், ரசிகர்களை திருப்திப்படுத்த அதிரடி ஆக்ஷன் காட்சிக்கு பஞ்சமில்லை.

லோகேஷ் கனகராஜ்
இன்று, திருவிழாப்போல வெளியான இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களோடு ரசிகராக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் பார்த்தார். அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தின் வெளியீட்டுக்காகத்தான் காத்திருந்தேன். இனிமேல் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்கள் வரும் என்றார். இதனைத் தொடர்ந்து, தளபதி 67 படத்தில் விஜய்யை எப்படி காட்ட போகிறீங்க என்ற கேள்விக்கு பாருங்க என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

தளபதி 67
மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று சென்னையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக செய்தி வெளியானது அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.விஜய்யின் 67 படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.