Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர்டா.. அவரும் நம்ம நண்பர் தான.. ரெண்டு படமும் ஓடும்.. துணிவு பற்றி விஜய் பேச்சு.. ஷாம் பேட்டி!
சென்னை: பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் வாரிசு படத்தில் நடித்துள்ளனர்.
வரும் பொங்கல் 2023க்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோத உள்ள நிலையில், அதுதொடர்பான நடிகர் விஜய்யின் பார்வை எப்படி உள்ளது என தனது லேட்டஸ்ட் பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் ஷாம்.
அஜித்துக்கு பிடிச்ச அந்த சீனையே வைக்கலயா.. துணிவு இயக்குநரை துவைத்து எடுக்கும் நெட்டிசன்கள்!

தளபதியின் வாரிசு
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்ட பேனர்கள் இப்போதே வைக்கப்பட்டு வாரிசு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சிம்பு கேமியோ
வாரிசு படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறப்பு கேமியோ பண்ணப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் வெளியான "தீ தளபதி" பாடலை பாடி அந்த பாடலின் லிரிக் வீடியோவில் சிம்பு நடித்திருந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தீ தளபதி முழு வீடியோ பாடலில் கூட சிம்பு வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

வாரிசு படத்தில் ஷாம்
இயற்கை, லேசா லேசா, 12 பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் ஷாம் வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாகப்பட்டின துறைமுகத்தில் எடுக்கப்பட்ட அந்த சண்டைக் காட்சியின் போது ஷாமைத் தான் விஜய் காப்பாற்றுகிறார் என்றும் கூறப்பட்டது. வாரிசு படத்தின் ரியல் வில்லனே இவராக இருப்பாரோ என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

ஷாம் பேட்டி
வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. அந்த பேட்டியில், வாரிசு மற்றும் துணிவு படங்கள் வரும் பொங்கல் பண்டிகையில் மோத உள்ளது குறித்து விஜய் சொன்ன விஷயம் தான் ஹைலைட்.

ரெண்டு படமும் ஓடும்
அஜித்தின் துணிவு படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வந்ததுமே விஜய் அண்ணனுக்கு போன் பண்ணிட்டேன்.. அண்ணா துணிவு படமும் பொங்கலுக்கு வருதுன்னா என சொன்னதுமே.. கொஞ்சம் யோசிக்காமல்.. நல்ல விஷயம் தானே டா.. அவரும் நம்ம நண்பர் தான.. ரெண்டு படமும் வரட்டும்.. ரெண்டு படமும் நல்லா ஓடும்.. ரசிகர்கள் இந்த பொங்கலை நல்லா கொண்டாடுவாங்களன்னு சொன்னார் என தனது பேட்டியில் நடிகர் விஜய் துணிவு படத்தின் மோதல் குறித்து பேசியதை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.