Don't Miss!
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி விஜய்யையே மெர்சலாக்கிய ராஜுவின் கண்கள்.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் சொன்ன சூப்பர் சீக்ரெட்!
சென்னை: வளரும் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் தளபதி விஜய்க்கு நிகர் அவர் தான் என்றே சொல்ல வேண்டும்.
பீஸ்ட் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யை சந்தித்த ராஜு ஜெயமோகனை ஸ்பெஷலாக விஜய் பாராட்டியது குறித்த சூப்பரான சீக்ரெட்களை வெளியிட்டு தளபதி ரசிகர்களின் ஃபேவரைட் ஆகி உள்ளார் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன்.
இயக்குநர் நெல்சன் உடன் ராஜுவும் விஜய் டிவியில் பணியாற்றிய நிலையில், பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை காணும் வாய்ப்பு ராஜுவுக்கு கிடைத்திருக்கிறது.
தனது ஃபேவரைட் போட்டியாளரை சந்தித்த ராஜு... ரியாக்ஷன் என்னன்னு தெரியுமா ?

டைட்டில் வின்னர் ராஜு
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் எந்தவொரு சிக்கலான பிரச்சனையிலும் அதிகளவில் கோபத்தைக் காட்டாமல் சக போட்டியாளர்களே பாராட்டும் அளவுக்கு காமெடியில் கலக்கிய ராஜு பாய்க்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உருவான நிலையில், இந்த சீசன் டைட்டிலை எளிதாகவே தட்டித் தூக்கினார் ராஜு ஜெயமோகன்.

ராஜு பேட்டி
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராஜு ஜெயமோகன் யூடியூப் தளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். தனது பேட்டியில் பிரியங்காவின் நட்பு மற்றும் பாவனி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் மற்றும் தன் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் காட்டிய அளவு கடந்த அன்பு என அனைத்து கேள்விகளுக்கும் தனது ஸ்டைலிலேயே பதில் அளித்தார்.

பீஸ்ட் ஷூட்டிங்கில்
உதவி இயக்குநராகவும், ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் விஜய் டிவியிலேயே ஏகப்பட்ட ஷோக்களை செய்துள்ள ராஜு ஜெயமோகன் அதே விஜய் டிவியில் ஷோ புரொட்யூசராக இருந்து தமிழ் சினிமாவில் டாப் இயக்குநராக மாறியுள்ள நெல்சனிடமும் நல்ல நட்பு உடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற பீஸ்ட் பட ஷூட்டிங்கில் நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார் ராஜு.

கண்டுபிடித்த விஜய்
என்னடா புதுசா ஒரு பையன் வித்தியாசமாக முட்டக் கண்களுடன் பார்க்கிறானே என நினைத்த நடிகர் விஜய், தன்னை கண்டுபிடித்து என்ன புதுசா? எனக் கேட்டார் என ராஜு தனது லைவ் பேட்டியில் கூறியுள்ளார். உடனடியாக இயக்குநர் நெல்சனை தெரியும் அதனால் தான் ஷூட்டிங்கிற்கு வந்தேன் என பதற்றத்தில் பேசிவிட்டேன் எனக் கூறியுள்ளார் ராஜு.

கண்கள் செமயா இருக்கு
நடிகர் சிவகார்த்திகேயனை விஜய் டிவியின் மேடையிலேயே அது தான் இந்த பக்கம் ஹீரோவாக வந்துட்டல.. இன்னும் ஏன் அந்த பக்கம் ஹோஸ்ட் பண்ணிட்டு இருக்க? என கேட்டவர் நடிகர் விஜய். இந்நிலையில், ராஜு ஜெயமோகனை பார்த்து உங்கள் கண்கள் செமயா இருக்கு என நடிகர் விஜய் பாராட்டியதை மறக்கவே முடியாது என பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு கூறியுள்ளது தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அத்துடன் விஜய்க்காக சிறு வயதில் இருந்தே சேர்த்து வைத்திருந்த புகைப்பட தொகுப்பு நோட்டை காண்பித்து அவரது ஆட்டோகிராஃபை பெற்றுக் கொண்டதாகவும் ராஜு கூறியுள்ளார்.