»   »  இணையத்தில் 60 லட்சம் ஹிட்ஸ்களைக் குவித்தது, சிம்பு-மஞ்சிமாவின் 'தள்ளிப் போகாதே'

இணையத்தில் 60 லட்சம் ஹிட்ஸ்களைக் குவித்தது, சிம்பு-மஞ்சிமாவின் 'தள்ளிப் போகாதே'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப் போகாதே பாடலை இதுவரை சுமார் 61,88,784 பேர் யூடியூபில் கண்டு களித்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், ராணா நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சம் என்பது மடமையடா.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் கவுதம் மேனன், சிம்பு, தாமரை மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறது.

இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16 ம் தேதி இப்படத்தின் 'தள்ளிப் போகாதே' ஒற்றைப்பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியாகி 44 நாட்களில் சுமார் 61 லட்சத்திற்கும் அதிகமான பேர் இப்பாடலை யூடியூபில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

மேலும் 47,922 லைக்ஸ்களைக் குவித்திருக்கும் இப்பாடலை இதுவரை 1௦௦௦ க்கும் அதிகமான பேர் மட்டுமே டிஸ்லைக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்புவின் ரசிகர்கள் #thallipogatheyhits6mviews என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Simbu's Thalli Pogathey Single Track Got 60 Lakhs Hits in YouTube. Now Simbu Fans Celebrating this Moment in Social all Networks.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil