விஜய்யின் தளபதி 66... வெளியான முதல் கலக்கல் அப்டேட்
சென்னை : விஜய் தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த படத்தின் ஷுட்டிங், விரைவில் முடிக்கப்பட்டு, 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை தெலுங்கில் முன்னணி டைரக்டராக இருக்கும் வம்சி பைடிபள்ளி ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்றும், தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க போகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சாமி தரிசனம்
படத்தின் அறிவிப்பை வெளியிட்ட கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் தளபதி 66 படக்குழுவினர். சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டைரக்டர் வம்சி, வழக்கமாக திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்வேன். ஆனால் கொரோனா காரணமாக பல மாதங்களாக வர முடியவில்லை. இந்த சமயத்தில் தெய்வ வழிபாடு மிக அவசியம். தளபதி 66 படம் பற்றி கூறுகையில், விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்தை பார்க்கும் போதும் , இவரை நாம் இயக்கினால் எப்படி இருக்கும் என நினைப்பேன். தற்போது அந்த கனவு நனவாகி உள்ளது என்றார்.

விரைவில் டைட்டில்
தளபதி 66 படத்தின் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட படக்குழு பற்றிய விபரம் விரைவில் டைட்டிலுடன் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் ஏற்கனவே கூறி உள்ளனர். இதனால் ஹீரோயின், படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக விஜய்யுடன் அடுத்து ஜோடி சேர்ந்து நடிக்க போவது யார் என்ற கேள்வி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தளபதி 66 ல் தமன்
இந்நிலையில் தளபதி 66 படத்தின் முதல் அப்டேட்டாக, இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் இசையமைத்து வரும் தமன், சமீபத்தில் தெலுங்கில் இசையமைத்த ஆல வைரகுந்தபுரமுலோ படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்ததுடன், பல விருதுகளையும் பெற்றது. எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும், விஜய் படத்திற்கு இசையமைக்க முடியவில்லையே என்பது தமனுக்கு மிகப் பெரிய குறையாக இருந்து வந்ததாம்.

கை நழுவி போன வாய்ப்பு
தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போவதாகவும், தமன் அதில் இசையமைக்க போவதாகவும் முதலில் கூறப்பட்டது. ஆனால் பிறகு அந்த வாய்ப்பு கை நழுவி போனதாம். தற்போது விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற தமனின் ஆசை நிறைவேற போகிறதாம். தளபதி 66 படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதல் முறையாக தமன் இசையமைக்க போகிறாராம்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமன் ஏற்கனவே ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தையும் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தான் தயாரித்து வருகிறது. தற்போது தளபதி 66 படத்திற்கும் தமன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுவதால் தமன் மற்றும் விஜய் ரசிகர்கள் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் தளபதி 66 இசை வேற லெவலில் மாஸ் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

டாப் ஹீரோயின்களுடன் பேச்சு
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்திய அளவில் புகழ்பெற்று இருக்கும் பல முன்னணி நடிகைகளிடம் பேசப்பட்டு வருகிறதாம். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தளபதி 66 பற்றி அடுத்தடுத்து பல அசத்தல் அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











