பாவனிக்கு பாயாசம் கொடுக்காதது தப்புதான்.. தாமரைக்கு கணவரின் தரமான அட்வைஸ்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சுமாராக விளையாடும் போட்டியாளர்களின் உறவினர்கள் கூட ஃப்ரீஸ் டாஸ்க்கில் உள்ளே நுழைந்த போது நீ சூப்பரா விளையாடுற என உற்சாகம் கொடுத்தனர்.

ஆனால், பாவனிக்கு பாயாசம் கொடுக்காதது தப்புதான் என தாமரை செல்வியின் கணவர் குறிப்பிட்டு தாமரைக்கும் பாவனிக்கும் இடையே இருந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முயன்றது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த சீசனின் டைட்டிலியே தாமரை செல்வி வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சரியான நேரத்தில் கோபத்தை அடக்கும் அறிவுரைகளை கணவர் வழங்கி சென்றிருக்கிறார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

எங்க அம்மா கூட ஏன் சண்டை போடுறீங்க

எங்க அம்மா கூட ஏன் சண்டை போடுறீங்க

தாமரை செல்வியின் மகன் மேஷ வர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், போட்டியாளர்களிடம் படு நெருக்கமாக விளையாடி மகிழ்ந்தான். மேலும், பிரியங்காவிடம் அடிக்கடி எங்க அம்மா கூட ஏன் சண்டை போடுறீங்க என்றும் கேட்டு அசத்தி விட்டான்.

தாமரையின் கணவர்

தாமரையின் கணவர்

மகனிடம் மல்லிகைப் பூ கொடுத்து முதலில் அனுப்பிவிட்டு பின்னர் பொறுமையாக தாமரையின் கணவர் உள்ளே நுழைந்ததும் பிரியங்காவை பார்த்து ஃபன் பண்ண கற்றுக் கொண்ட தாமரை ஓடி போய் அழுது கட்டியணைத்த காட்சிகள் தாமரை சொல்வது போலவே யாரோ சொல்லிக் கொடுத்து செய்தது போலவே இருந்ததாகவும் கமெண்ட்டுகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

காது கொடுத்து கேள்

காது கொடுத்து கேள்

நீ நல்லா விளையாடுற.. இந்த அளவுக்கு நீ வருவதற்கு காரணம் இங்குள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் உனக்காக உதவியது தான் காரணம் என்று சொன்ன தாமரையின் கணவர் யார் என்ன சொல்ல வராங்க? எதுக்கு சொல்ல வராங்க? என காது கொடுத்து கேள், முழுவதுமாக கவனி அப்புறம் உன்னுடைய வாதத்தை முன்னிறுத்தினால் சிறப்பாக இருக்கும். அதற்கு பதிலாக எடுத்ததும் கத்தாதே என சரியான அட்வைஸ் கொடுத்தார்.

பாயாசம் கொடுக்காதது தப்புதான்

பாயாசம் கொடுக்காதது தப்புதான்

சுருதி காயினை திருட பாவனி உதவி செய்ததில் இருந்தே பாவனிக்கும் தாமரைக்கும் ஆகவில்லை. ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் பாயாசம் செய்து கொடுத்து ஊற்றிக் கொடுத்த தாமரை செல்வி பாவனிக்கு பாயாசம் கொடுக்காதது தப்பு தான் என்று தாமரையின் கணவர் சொன்ன நிலையில், பாவனி ரசிகர்களின் ஃபேவரைட் ஆகி விட்டார் பார்த்தசாரதி.

தாமரையிடம் மாற்றம்

தாமரையிடம் மாற்றம்

பிக் பாஸ் கேம் என்னவென்றே தெரியாமல் உள்ளே நுழைந்து கொண்டு ஒவ்வொன்றாக கற்று அனைத்து கேம்களிலும் முனைப்புடன் பங்கெடுத்து கேப்டனாக தகுதியில்லை என்ற சொன்னவர்கள் முன்னிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு கேப்டனாகி கெத்துக் காட்டி வரும் தாமரையிடம் உள்ள அந்த சின்ன முன் கோபமும் புரியாமல் போடும் சண்டையையும் அவரது கணவர் வந்து சொன்ன பிறகு மாறிய நிலையில் பாவனியை மடியில் அமர்த்திக் கொஞ்சியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X