ஒரு கோடி கொடுத்தாலும் போக மாட்டேன்னு சொன்னாங்களே.. இந்த வாரம் வெளியேறியது தாமரை தானா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியது தாமரைச் செல்வி தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெட்டியை எடுக்கும் முன்பாக சிபி அக்கா உனக்கு வேண்டும் என்றால் எடுத்துக்கோ என சொல்லியும் கேட்காமல் நிரூப்பின் பேச்சை கேட்டு பெட்டியை எடுக்காமல் இருந்த தாமரை கடைசியில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகி உள்ளார் என கூறப்படுகிறது.

நிரூப் 2வது ஃபைனலிஸ்ட்டாக இறுதி வாரத்திற்குள் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தாமரை தங்கம்

தாமரை தங்கம்

தெருக்கூத்து நாடகங்களில் நடித்து வந்த தாமரை பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட போது யாரு இந்த ஆயம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்காங்க முதல் வாரமே இவங்க தான் வெளியேற போறாங்கன்னு பலர் கலாய்த்தார்கள். ஆனால், தனது விடா முயற்சியால் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து பல கோடி மக்களின் மனங்களை பிடித்து விட்டார்.

மறக்க முடியாத பிக் பாஸ் போட்டியாளர்

மறக்க முடியாத பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களில் வந்த போட்டியாளர்களில் மறக்கவே முடியாத ஒரு முகமாக தாமரைச் செல்வி மாறிவிட்டார். ஒன்றுமே தெரியாத வெள்ளந்தியாக வந்து ஒவ்வொன்றையும் நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டு இந்த கேமை சிறப்பாக ஆடிய தாமரை பத்து வருஷம் இதே விஜய் டிவியில் பேசி பேசியே பிரபலமான பிரியங்காவையே படாத பாடு படுத்தி விட்டார்.

தாமரையா? பாவனியா?

தாமரையா? பாவனியா?

டிக்கெட் டு ஃபினாலே மூலமாக அமீர் முதல் நபராக உள்ளே நுழைந்த நிலையில், டேர் டாஸ்க் கொடுத்து நிரூப்பை கடைசி நாளில் பிக் பாஸ் சேவ் செய்ய வைத்து விட்டார். சிபி பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், தாமரையா? அல்லது பாவனியா? யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தாமரை எவிக்ட்டா

தாமரை எவிக்ட்டா

இந்நிலையில், தற்போது தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாவனி வெளியேறாமல் சேவ் ஆகிவிட்டார் என்றும் தாமரை தான் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. சமூக வலைதளங்களில் #Thamarai என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு தாமரையின் ரசிகர்கள் அவர் ஃபைனல்ஸ் வரை சென்றிருக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

நிரூப்புக்காக மோசடி

நிரூப்புக்காக மோசடி

இந்த வாரம் தாமரை, பாவனியை தொடர்ந்து கடைசி இடத்தில் தான் நிரூப் இருந்தார் என்றும் அவரை இறுதி வாரத்திற்குள் அனுப்ப பிக் பாஸ் டீம் செய்த மோசடியால் தான் தற்போது தாமரை வெளியேறும் நிலை உருவாகி விட்டது என தாமரை ரசிகர்கள் நிரூப்பை மீண்டும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாப்ரி ஆர்மி

பாப்ரி ஆர்மி

பாவனி, நிரூப் மற்றும் தாமரை மூவருமே ஒரே அளவிலான வாக்குகளுடன் சற்றே முன்னரும் பின்னரும் இருந்த நிலையில், பாவனி தான் இந்த வாரம் வெளியேற போகிறாரா என நினைத்த பாவனி மற்றும் பிரியங்காவின் ஆர்மி ஓட்டுக்களை போட்டு தாமரைக்கு மேல் பாவனியை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பணப்பெட்டி எடுத்திருக்கலாம்

பணப்பெட்டி எடுத்திருக்கலாம்

தாமரைச் செல்வி சிபி சொல்லும் கேட்கும் போதே பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என்றும் ஆனால், ஒரு கோடி கொடுத்தாலும் வேண்டாம் இந்த பிக் பாஸ் வீட்டில் இன்னும் ஒரு வாரம் வாழ வேண்டும் என தாமரை செல்வி பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், இப்படி அவரை வெளியேற்றுவது சரியான செயல் அல்ல என்றும் தாமரை ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X