For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மதுக்கடை திறப்பு.. கொரோனா இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை.. தங்கர்பச்சான் ஆவேச அறிக்கை!

  By
  |

  சென்னை: மதுக்கடை திறப்பு காரணமாக, கொரோனா இனி ஒருவரையும் விட்டு வைக்கப்போவதில்லை என்று இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

  தாலிய அறுக்க வெச்சிடீங்க | Director Amir Emotional Speech

  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுவில் இருந்து மீண்டு விடலாம் என 43 நாட்கள் குடிக்காமல் இருந்தார்கள் மக்கள். ஆனால் அரசாங்கத்தால் தான் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை.

  இன்னும் மூன்று மாதங்கள் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தால் குடியை மறந்து வருமானம் முற்றிலுமாக நின்றுவிடும் என்று நினைத்து இப்போது திறக்கிறார்களோ எனும் எண்ணம் எழுகிறது!

  ஏ மாடு..எனக்கு ஹாப்பி பார்த்டே சொல்லு..மாட்டுக்கு கேக் ஊட்டிய மணிமேகலை !ஏ மாடு..எனக்கு ஹாப்பி பார்த்டே சொல்லு..மாட்டுக்கு கேக் ஊட்டிய மணிமேகலை !

  இப்படி செய்யலாமா?

  இப்படி செய்யலாமா?

  இந்த 40 ஆண்டுகளுக்குள் சாராயம் விற்கிற வேலையை அரசாங்கமே செய்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் குடிக்கத்தொடங்கி அடிமையாகி அலைகிறார்கள். மக்களை காக்க வேண்டியவர்கள் இந்தபேரழிவு காலத்தில்கூட இப்படி செய்யலாமா? எனக்கேட்டால் ஆட்சி நடத்த பணம் இல்லை; அதற்காகத்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேடு விளைவிக்கும் அவமானத்திற்குரிய செயல்?

  பாதி தொகை

  பாதி தொகை

  மக்கள் பணம் 68 ஆயிரம் கோடியை பணக்கார முதலாளிகளுக்கு கடனாகக் கொடுத்துவிட்டு அந்த கடனை ஒரே அறிவிப்பில் தள்ளுபடி செய்து அதற்கு காரணமும் கூறுபவர்களை எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லையே? வருவாய் குறைந்து விட்டதற்காக முதலில் ஆந்திர அரசு தனது ஊழியர்களுக்கு இனி பாதி தொகை மட்டுமே மாத ஊதியம் என அறிவித்தது.

  பணப் பற்றாக்குறை

  பணப் பற்றாக்குறை

  அதை பின்பற்றி ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களும் அறிவித்தன. ஏற்கனவே ஜிஎஸ்டி பணம் மாநிலங்களுக்கு இல்லாமல் மத்திய அரசுக்கு சென்று விட்டது. அத்துடன் மத்திய அரசு அறிவித்த குறைந்த அளவிலான கோவிட்19 உதவித்தொகையும் கூட முறையாக இன்னும் வந்து சேரவில்லை என்பதால் தமிழக அரசு பணப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

  ஏற்கக் கூடியதா?

  ஏற்கக் கூடியதா?

  வேறு வழியில்லாத இந்த இக்கட்டான நிலையில் பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் ஊழியர்களுக்கான மாத ஊதியத் தொகையை ஏன் பாதியாக அறிவிக்க தயங்குகிறது என்பது புரியவில்லை. இதைச் செய்யாமல் வருமானம் இல்லாததால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய காத்திருக்கும் கொரோனா கிருமி இனி ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை.

  முறையான மருந்து

  முறையான மருந்து

  எத்தனையோ குடும்பங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள் சிறுவர்கள் முதியோர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இனி மேல் அவர்களெல்லாம் நோய்த் தொற்றுக்கு ஆளாவார்கள். ஏற்கனவே நம்மிடம் முறையான மருந்தும் இல்லை, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்குமே பற்றாக்குறை. இவர்களை எல்லாம் இனி எங்கே கொண்டு போய் படுக்க வைக்கப் போகிறார்கள்?

  குடி நோயாளிகள்

  குடி நோயாளிகள்

  பசியுடன் நாட்களை கடத்த போகும் இந்த தாய்மார்களை, பிள்ளைகளை, முதியோர்களை, குடிநோயாளிகள் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவார்கள். குடித்துவிட்டு கொரோனாவை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அதன்பிறகும் துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும், கதறும் பெண்களின் தாலிகள் மஞ்சள் கயிறாக மாறும். மருத்துவத்திற்கும், வாழ்க்கை நடத்தவும் மக்களை அலையவிட்டு எத்தனை பிணங்கள் ஒரு நாளைக்கு விழுகிறது என்ற செய்தியைத்தான் ஊடகங்கள் கொடுத்துக் கொண்டிருக்க போகின்றன?

  கணக்கு போடலாம்

  கணக்கு போடலாம்

  எது நடந்தாலும் எதைச் செய்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள்! அதனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என அரசியல்வாதிகள் கணக்கு போடலாம். நிதி நெருக்கடியிலுள்ள தமிழகத்தை தனிப்பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தயவு செய்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மக்களைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்..

  English summary
  Thangar Bachan angry statement against tasmac reopen
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X