»   »  தனி ஒருவன் 2... கதை ரெடி... இதில் ஜெயம் ரவி ஹீரோ மட்டுமல்ல, உதவி இயக்குநரும் கூட!

தனி ஒருவன் 2... கதை ரெடி... இதில் ஜெயம் ரவி ஹீரோ மட்டுமல்ல, உதவி இயக்குநரும் கூட!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கதைக்கருவை இயக்குநர் ராஜா தயார் செய்து விட்டதாகவும், அந்தப் படத்தில் தான் ஹீரோவோடு, உதவி இயக்குநராக பங்களிக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது தனி ஒருவன் படம். ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ராம் சரண் நடிக்க தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைக்களம் எப்படி இருக்கும் என ஜெயம் ரவி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கதைக்கரு தயார்...

கதைக்கரு தயார்...

தனிஒருவன் 2வது பாகத்துக்கான கதைக் கருவை அண்ணன் தயார் செய்து விட்டார். என்னிடம் கூறிய போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. நம்ம இந்தப் படத்தை பண்றோம் என்றார்.

உதவி இயக்குநர்...

உதவி இயக்குநர்...

எப்போது வேண்டுமோ என்னை கூப்பிடு நான் வந்துவிடுகிறேன். கதை விவாதத்தின் போது கூட கூப்பிட்டு என்று தெரிவித்திருக்கிறேன். ஏனென்றால் எங்க அண்ணன் படத்தில் ஓர் உதவி இயக்குநராகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.

சொல்லப்படாத விஷயம்...

சொல்லப்படாத விஷயம்...

அந்தப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயம்.

நினைத்துப் பார்க்க முடியாதது...

நினைத்துப் பார்க்க முடியாதது...

நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு விஷயம். தேவைப்படுற ஒரு விஷயமா அது வரும்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Jayam Ravi revealed that M Raja has already planned to make this movie, and he has already finalized the one line for the flick. As per the actor, Thani Oruvan 2 will handle an untouched subject which Tamil audiences has never witnessed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil