»   »  யாரும் கண்டுக்காத மீரா ஜாக்கிரதைக்கு ஃப்ரீயா கிடைத்த சூப்பர் விளம்பரம்: தேங்க்ஸ் பாபி

யாரும் கண்டுக்காத மீரா ஜாக்கிரதைக்கு ஃப்ரீயா கிடைத்த சூப்பர் விளம்பரம்: தேங்க்ஸ் பாபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீரா ஜாக்கிரதை படத்திற்கு பாபி சிம்ஹா செய்த பிரச்சனையால் இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது.

ராணுவத்தில் பணியாற்றிய ஆர்.ஜி.கேசவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ஹாரர் படம் மீரா ஜாக்கிரதை. படம் ரிலீஸாகியும் மக்கள் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் தான் படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளார் பாபி சிம்ஹா.

Thanks to Bobby Simha: Meera Jaakirathai gets free publicity

அது என்னப்பா படம் மீரா ஜாக்கிரதை யாரும் தெரிஞ்ச முகமாக இல்லையே என்று ரசிகர்கள் கூறியபோது தான் அவர்களுக்கு ஓ பாபி சிம்ஹா தான் நடிக்கவே இல்லை, ஆனால் தனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று புகார் கொடுத்தாரே அந்த படமா என்று நினைவுக்கு வந்துள்ளது.

நடிகர் சங்கம் வரை புகார் செல்ல சங்கத் தலைவர் நாசர் படத்தை பார்த்துள்ளார். படத்தில் பாபி நடித்தது உண்மை தான் ஆனால் ஏன் பொய் சொல்கிறார் என தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் நாசர்

பாபி ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி கொலை செய்கிறார். அந்த பெண்ணின் ஆவி அவரை பழிவாங்குவது தான் கதையே. இப்படி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு பல்ட்டி அடித்துள்ளார் பாபி.

சும்மாவே பேய் படம்னா நம்ம கோலிவுட் ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுப்பார்கள், தற்போது சர்ச்சை வேறு கிளம்பியுள்ளதால் உண்மையை கண்டறிய துப்பறியும் சாம்புகளாக கிளம்பிடுவாங்க.

English summary
Horror movie Meera Jaakirathai which hit the screens today has got free publicity, thanks to Bobby Simha.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil