The Batman : The bat and The Cat டிரைலர்...ஒரே நாளில் இத்தனை பார்வைகளா
செனனை : டைரக்டர் Matt Reeves இயக்கத்தில் Robert Pattinson நடித்துள்ள The Batman : The bat and The Cat படம் 2022 ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் காமிக் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் டிரைலர் மற்றும் மெயின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் அமெரிக்க ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.

ஒரே நாளில் இத்தனை பார்வைகளா
இந்நிலையில் இந்த படத்தின் புதிய டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே நாளிலேயே 9.2 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. டிரைலர் ஒன்றிற்கு ரசிகர்கள் இந்த அளவிற்கு வரவேற்பை கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதிரடி கார் சேசிங்
கிட்டதட்ட 3 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் வீடியோ முழுவதும் Batman மற்றும் Penguin இடையேயான அதிரடி கார் சேசிங் காட்சிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வில்லன் கேரக்டரான Riddler ரோலில் நடித்துள்ள Paul Dano வரும் காட்சிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வித்தியாசமான டிரைலர்
மூன்றாவதாக அனைவரையும் கவனிக்க வைப்பது Batman, Catwoman இடையேயான உறவை சொல்வதாக உள்ளது. Zoe Kravitz, Catwoman ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் டிரைலர்களுடன் ஒப்பிடுகையில் இது வித்தியாசமாக, எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்போது ரிலீஸ்
டார்க் தில்லர் படமான The Batman : The bat and The Cat படம் பெரும்பாலும் Batman காமிக் மற்றும் விளையாட்டுக்களை பிரம்மாண்டமாக காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2022 ம் ஆண்டு, மார்ச் 4 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











