For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஜித்துக்கு அல்டிமேட்டாக வாழ்த்து சொன்ன பிரபல இயக்குநர்: திடீரென ட்ரெண்டாகும் இன்ஸ்டா பதிவு!

  |

  சென்னை: தல, அல்டிமேட் ஸ்டார், தன்னம்பிக்கை நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹீரோ அஜித் குமார்.

  அஜித் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும், அதனை ட்ரெண்ட்டாக்கி மகிழ்வது அவரது ரசிகர்களின் வழக்கம்.

  இந்நிலையில், தற்போது அஜித் பற்றிய பிரபல இயக்குநரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட், ட்ரெண்டிங்கில் டாப் டக்கராக கலக்கி வருகிறது.

  முதல்ல விஜய்.. அப்புறமா அஜித்.. மாஸ்டர் டைரக்டருக்கு வந்த ஆசையை பாருங்க! முதல்ல விஜய்.. அப்புறமா அஜித்.. மாஸ்டர் டைரக்டருக்கு வந்த ஆசையை பாருங்க!

  தடைகளைத் தகர்த்தெறிந்த தலைமகன்

  தடைகளைத் தகர்த்தெறிந்த தலைமகன்

  துயரங்கள் கோர்த்த தோல்விகள் பல துரத்தினாலும், அதில் சற்றும் துவண்டு விடாமல் தனது இலக்கை நோக்கிய துல்லியமான பயணத்தின் மூலம் பல வெற்றிகளைத் தனதாக்கியவர் நடிகர் அஜித்குமார். இளைஞர்களின் உத்வேகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு, பைக் ரேஸர், கார் ரேஸர், துப்பாக்கி சுடுதல் என பன்முகக் கலைஞனாகவும் ஜொலித்து வருகிறார்.

  பைக் ரேஸர் டூ சினிமா ஹீரோ

  பைக் ரேஸர் டூ சினிமா ஹீரோ

  ஆரம்பத்தில் பைக் மெக்கானிக்காகவும், அதில் ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸராகவும் வாழ்க்கையைத் தொடர்ந்த அஜித், பின்னர் மாடலிங், சினிமா என திசை திரும்பினார். அந்தத் திருப்பம் அஜித்துக்கு மட்டும் மாற்றத்தைக் கொடுக்காமல், திரைத்துறையிலும் பெரும் பிரளயத்தையே உருவாக்கும் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

  கோடான கோடி ரசிகர்களின் ஆதர்ச நாயகன்

  கோடான கோடி ரசிகர்களின் ஆதர்ச நாயகன்

  தெலுங்குத் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அடியெடுத்து வைத்த அஜித், தமிழில் 'அமராவதி' மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, அமர்க்களம், முகவரி, வாலி போன்ற படங்கள் மூலம் கோடான கோடி ரசிகர்களின் ஆதார்ச நாயகனாகிப் போனார். அதனால் தான் ரசிகர் மன்றங்கள் இல்லாத போதும், அஜித்தின் மீது பேரன்பு கொண்ட ரசிகர்கள், அவரை கொண்டாடித் தீர்க்கின்றனர்.

  ஆல் இன் ஆல் அல்டிமேட் ஸ்டார்

  ஆல் இன் ஆல் அல்டிமேட் ஸ்டார்

  கனிந்துருகும் காதல் படங்களாகட்டும், தீனா, ரெட், பில்லா, மங்காத்தா என அதிரடி கதைக் களமாகட்டும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் எல்லாமே வரலாறாகிப் போனது. அஜித்தின் வெற்றிகளை விட தோல்வி படங்களின் எண்ணிக்கையே நெடியது. ஆனாலும் அவைகளை மிக திடமான மன உறுதியாலும் தன்னம்பிக்கையாலும் தகர்த்தெறிந்த வலிமை மிகுந்தவராக பயணித்துக் கொண்டிருப்பதே அஜித்தின் தனிச் சிறப்பு.

  ஏகே 62 இயக்குநரின் திடீர் வாழ்த்து

  ஏகே 62 இயக்குநரின் திடீர் வாழ்த்து

  'வலிமை' படத்தைத் தொடர்ந்து, ஹெச் வினோத் இயக்கும் 'ஏகே 61' படத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும், அவரது 62வது படம் குறித்தும் அபிஸியலாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. லைக்கா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும், 'ஏகே 62' படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென அஜித்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

  தன்னம்பிக்கையோடு 30 ஆண்டுகள்

  தன்னம்பிக்கையோடு 30 ஆண்டுகள்

  விக்னேஷ் சிவனின் வழ்த்துக்கு பின்னால் இருக்கும் காரணம் தெரிந்தால், ரசிகர்கள் பலரும் மெய்சிலிர்த்து போய்விடுவார்கள். ஆமாம், அஜித் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனை குறிப்பிட்டே, இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். அதில், 'தன்னம்பிக்கையின் 30 ஆண்டுகள்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்,

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  மேலும், "தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மனிதனை 30 ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இன்னும் பல வருடங்கள் உங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம், நன்றி அன்புள்ள அஜித் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த போஸ்ட்டை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். இதனிடையே மேலும் பல பிரபலங்களும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

  English summary
  As Ajith Kumar completes 30 years in the industry, Vignesh Shivan pens a heartfelt note for his AK 62 star
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X