ஊரடங்கு ரத்திற்கு பிறகு ரிலீசாக போகும் முதல் தமிழ் படம்...எது தெரியுமா ?
சென்னை : தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பிறகு தியேட்டரில் ரிலீசாக போகும் முதல் தமிழ் படம் எது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதிலும் பெரிய நடிகர் படங்களில் யாருடைய படம் முதலில் ரிலீசாக போகிறது என்பதை பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் உச்சமடைந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது. இதனால் ஜனவரி மாதத்தில், அதுவும் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி ரிலீசிற்கு குறி
பிப்ரவரி 1 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து பெரிய ஸ்டார்களின் படங்களின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீசானதால், ஜனவரியில் திட்டமிடப்பட்ட பெரிய நடிகர்கள் படங்களும் பிப்ரவரி மாத ரிலீசை குறிவைத்துள்ளன.

இந்த படம் தான் ஃபஸ்ட்
தமிழ் படங்கள் வெள்ளிகிழமைகளிலேயே ரிலீஸ் செய்யப்படும் என்பதால் பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 4ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அல்லது விஷாலின் வீரமே வாகை சூடும் இதில் எது ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் முதல் ஆளாக விஷாலின் வீரமே வாகை சூடும் தான் முதலில் ரிலீசாக உள்ளதாம்.

பலமுறை தள்ளிப் போன ரிலீஸ்
புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்ட்டரி தயாரித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான வீரமே வாகை சூடும் படம் முதலில் தீபாவளி, பிறகு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்தார்கள். பிறகு குடியரசு தினமான ஜனவரி 26 அன்று சோலோவாக களமிறங்க உள்ளதாக கூறினார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அறிவிப்பு தேதி பிப்ரவரிக்கு மாற்றப்பட்டது.

இரு மொழிகளில் ரிலீஸ்
நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன், அதிகாரம் மிக்க மோசமான கூட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்பது தான் வீரமே வாகை சூடும் படத்தின் கதை. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ், குமாரவேல், துளசி, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழில் வீரமே வாகை சூடும் என்ற பெயரிலும், தெலுங்கில் சாமானியடு என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











