பல பாதிரியார்கள் சொன்ன மனகுமுறல்களே ருத்ர தாண்டவம்...அதிரடி காட்டிய இயக்குனர்

சென்னை :அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்கில் வெளிவரப்போகும் ருத்ர தாண்டவம் திரைப்படம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .அதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் தான்.

இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து ராதாரவி,தர்ஷா குப்தா,மாளவிகா அவினாஷ் போன்ற பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

மோகன் ஜி இயக்கிய படம் என்றாலே பல சர்ச்சைகளில் சிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எதார்த்தமான கதை என்று மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைக்கும் .

எதார்த்தமான விஷயங்கள்

எதார்த்தமான விஷயங்கள்

கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன் கடும் எதிர்ப்புகளும் இருந்து வந்தது ,அதனாலேயே ருத்ர தாண்டவம் படத்திற்கு மக்களிடையே கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ருத்ர தாண்டவம் படத்திலும், திரௌபதி படத்தில் பணியாற்றிய அதே கூட்டணி ஒன்று சேர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சர்ச்சையான கருத்துக்கள்

சர்ச்சையான கருத்துக்கள்

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பேசியது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவுகின்றது.பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றுவதைவிட நாட்டில் உள்ள பிரச்சனைகளையும், நம்மை சுற்றியுள்ள எதார்த்தத்தையும் இயக்கவே தனக்கு பிடிக்கும் என்று அவர் பேசியது, சினிமா ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வெற்றி கூட்டணி

வெற்றி கூட்டணி

இக்காலகட்டத்தில் பெரிய நடிகர்களை வைத்து படங்களை ஹிட் கொடுக்க நினைக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் இவர் இப்படி பேசியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் ஜாதி மதத்தை பற்றி எதார்த்தமாக பேசியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .

பல கருத்துக்கள்

பல கருத்துக்கள்

இப்படத்தின் கதையை சொன்ன போது அனைவரும் தன்னை பாராட்டியதாகவும், இந்த மாதிரியான எதார்த்த கதைகள் அனைவரையும் கவர்கிறது,விழிப்புணர்வு படங்களே தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் இயக்குனர்.

உருவான விதம்

உருவான விதம்

பல பாதிரியார்கள் சொன்ன மனகுமுறல்களே ருத்ர தாண்டவம் கதை உருவாக காரணம் என்று அவர் பேசியது தற்போது கவனிக்கப்படும் விதமாக உள்ளதாகவும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.திரௌபதி படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்த ரிஷி ரிச்சர்டை பாராட்டியதுடன்,அவரின் தனித்துவத்தையும்,தனது எதார்த்தத்தை வெளிக்கொண்டு வர அவரே சிறந்தவர் என்றும் அவர் கூறினார்.இந்த பதிவுகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகின்றது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X