ரொம்ப வருஷம் ஆச்சு இப்படி சந்தோஷப்பட்டு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷேர் பண்ண அட்டகாசமான போட்டோ!
சென்னை: அரபிக் குத்து பாட்டுக்கு செம ஸ்டெப்புகளை போட்டுள்ள ஜானி மாஸ்டருடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த ஜனவரி 17ம் தேதி ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் டைரக்ஷனில் தனது கவனத்தை திருப்பி உள்ளார்.

பிரிய காரணமே
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே பிரிவதற்கான முக்கிய காரணமாகவே இருவர் மனதிலும் உருவாகி உள்ள வேலை தொடர்பான எண்ணம் தான் என்கின்றனர். நடிகர் தனுஷ் கோலிவுட் நாயகனாக மட்டும் சுருங்கி விடாமல் தனது நடிப்புத் திறமையை உலகம் முழுக்க விரிவுப்படுத்த நினைக்கிறார்.

அவருக்கும் அதே ஆசை தான்
அதே போலவே நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் குடும்பத் தலைவியாக மட்டும் இருந்து தனது திறமைகளை முடக்கிக் கொள்ளாமல் இயக்குநராக அசத்த வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே உள்ளது தான் அந்த பிரச்சனை உருவாகவே காரணம் என்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்த அடுத்த கணமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புதிய ஆல்பம் பாடலை இயக்க ஆரம்பித்துவிட்டார்.

மீண்டும் இயக்கம்
காதலர் தினத்தை முன்னிட்டு முஸாஃபிர் எனும் புதிய காதல் ஆல்பத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலர் தினத்தன்று அனிருத் உள்ளிட்ட பாடகர்கள் அந்த பாடலை பாடும் அறிமுக புரமோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், தற்போது அந்த பாடலுக்கான ஷூட்டிங்கில் இறங்கி உள்ளார்.

தனுஷ் பெயர் நீக்கம்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் தனுஷ் பெயரை நீக்காத ஐஸ்வர்யா அந்த வீடியோ பாடலின் அறிமுக வீடியோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போட்டிருப்பது ரசிகர்களை ஒரே குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தனுஷின் பெயரை நீக்காமல் புதிதாக இயக்கும் ஆல்பம் பாடலில் மட்டும் நீக்கியிருக்கிறாரே என்கிற கேள்விகளை எழுப்பினர்.

கேமராவுடன்
சினிமா எடுக்கும் பெரிய கேமராவுடன் நின்று கொண்டு மானிட்டரிங் பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மேலும், அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் ரசிகர்களை சர்ப்ரைஸ் ஆக்கி உள்ளது. இந்த பாடலுக்கு யார் நடனம் அமைக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜானி மாஸ்டர்
பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து வரும் ஜானி மாஸ்டர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி வரும் இந்த பாடலுக்கும் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குநர் என்பதால், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பாடலிலும் நடன அசைவுகள் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சந்தோஷத்தை
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு சந்தோஷத்தை அனுபவிக்கிறேன் என கேமராவை ஹேண்ட்லிங் செய்து மீண்டும் இயக்கத்தில் இறங்கி உள்ள தருணத்தை குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டு இருப்பது கோலிவுட்டில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. கூடிய விரைவிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா ஒன்றையும் இயக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











