Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களுக்காக இறங்கி வந்த அண்ணாச்சி… ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் தி லெஜண்ட்!
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலமானவர் அதன் உரிமையாளர் லெஜண்ட் அண்ணாச்சி.
தனது சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கிய அண்ணாச்சி, அதன்பின்னர் சினிமாவிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
அதன்படி, அண்ணாச்சி ஹீரோவாக நடித்து பிரம்மாண்டமாக உருவான 'தி லெஜண்ட்' திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது.
வீடு கட்ட தயாராகும் மூர்த்தி.. அடுத்தக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அட நிலம்கூட வாங்கியாச்சா?

அண்ணாச்சியின் அவதாரம்
சென்னையின் அடையாளம் தியாகராய நகர் என்றால், அதன் இதயமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மக்களிடம் பிரபலமாகியுள்ளன. சரவணா ஸ்டோர்ஸ் குரூப் உரிமையாளர்களில் ஒருவரான லெஜண்ட் அண்ணாச்சி, தனது கடை விளம்பரங்களில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்தார். அந்த விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போட்ட அண்ணாச்சி, அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் கெத்தாக அடியெடுத்து வைத்தார். பிரம்மாண்டமாக உருவான தி லெஜண்ட் திரைப்படத்தை தயாரித்து அதில், அவரே ஹீரோவாகவும் நடித்து மாஸ் காட்டினார்.

லெஜெண்ட் தியேட்டர் ரிலீஸ்
அண்ணாச்சி ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் திரைப்படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் என பெரிய நட்சத்திரக் கூட்டணியில் உருவானது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சயின்ட்டிஸ்ட் கேரக்டரில் அதகளம் பண்ண அண்ணாச்சி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் ஆல் ரவுண்டராக கலக்கினார். இறுதியாக தி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், ஹீரோவாக நடித்த அண்ணாச்சியின் துணிச்சலை பலரும் பாராட்டியிருந்தனர்.

ஓடிடியில் வெளியாகும் தி லெஜெண்ட்
திரையரங்குகளில் பெரிய அளவில் சக்சஸ் கொடுக்காத தி லெஜண்ட் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்தனர். ஆனால், தி லெஜண்ட் படத்தை ஓடிடியில் வெளியிட வாய்ப்புகள் இல்லை எனக் கூறப்பட்டது. படத்தின் ஹீரோவான அண்ணாச்சி ஓடிடியில் படத்தை வெளியிட விருப்பம் இல்லை என மறுப்பு தெரிவித்துவிட்டார் என தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது தி லெஜெண்ட் படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களுக்காக மாறிய அண்ணாச்சி
முன்னணி ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் தி லெஜெண்ட் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், விரைவில் இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் ஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளதாம். ரசிகர்களின் விருப்பத்திற்காக தான் தி லெஜெண்ட் படத்தின் ஓடிடி ரைட்ஸை அண்ணாச்சி கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அண்ணாச்சி தனது அடுத்த படத்திற்காக சுந்தர்.சியிடம் கதை கேட்டு வருகிறாராம். விரைவில் இந்த கூட்டணி இணைகிறதா இல்லையா என தெரியவரும்.