Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னது தி லெஜண்ட் படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமா இருக்காங்களா.. வாக்குப்பதிவில் வெளியான உண்மை!
சென்னை : வரும் 28, 29 தேதிகளில் சிறப்பான படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் தி லெஜண்ட், விக்ராந்த் ரோனா, குலுகுலு படங்கள் சிறப்பான எதிர்பார்ப்பை பெற்றுள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் தி லெஜண்ட் படம் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் புக்கிங் துவங்கியுள்ள நிலையில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவங்களை
எல்லாம்
உள்ளே
புடிச்சி
போடமாட்டாங்களா..
பாத்ரூமில்
அரை
நிர்வாணமாக
வீடியோ
வெளியிட்ட
நடிகை!

சிறப்பான படங்கள்
வாரந்தோறும் சிறப்பான பல படங்களை திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். சினிமா காதலர்களை திருப்திப்படுத்தும் வகையில் வாரந்தோறும் முன்னணி நடிகர்களின் சிறப்பான இயக்குநர்களின் படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. சிறிய பட்ஜெட் படங்களும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன.

28, 29 தேதிகளில் ரிலீஸ்
அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான படங்கள் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளன. விக்ராந்த் ரோணா, தி லெஜண்ட் மற்றும் ஜோதி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் தி லெஜண்ட் படம் மிகவும் கவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் முதல்முறையாக லெஜண்ட் சரவணன் அருள் நடித்துள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தி லெஜண்ட்
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பையும் யூடியூபில் அதிக லைக்சையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வெளியாகிவரும் படத்தின் போஸ்டர்களும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிகாலை காட்சி
தன்னுடைய அறிமுகப்படத்திலேயே இந்தப் படத்தின் முதல் காட்சியை அதிகாலையிலேயே வெளியிட உள்ளார் சரவணன். ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கே இந்த சிறப்பு காணப்படும். சிம்புவின் மாநாடு படத்தின் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி
இந்நிலையில் அறிமுக நடிகரான சரவணன் அருளின் இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கியுள்ளன. இதனிடையே, இணையத்தில் 28, 29 தேதிகளில் வெளியாகவுள்ள எந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

ரசிகர்கள் விருப்பம்
இதில் அதிகமான ரசிகர்கள் தி லெஜண்ட் படத்தை பார்க்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சந்தானத்தின் குலுகுலு, ஜோதி, விக்ராந்த் ரோணா உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில் சந்தானத்தின் குலுகுலு படம் 29ம் தேதி வெளியாக உள்ளது. ரத்னகுமார் இயக்கத்தில் இந்தப் படமும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
கிச்சா சுதீப் நடிப்பில் விக்ராந்த் ரோணா உலகளவில் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. தொடர்ந்து 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி நடிப்பில் ஜோதி படம் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படம் குழந்தைக் கடத்தலை மையமாக கொண்டு ரிலீசாக உள்ளது. பேட்டரி மற்றும் கொளத்தூரான் படங்களும் இந்த வாரத்தில் ரிலீசாக உள்ளன.

புக்கிங்குகள் ஓபன்
இந்த வாரம் சிறப்பான படங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. இந்தப் படங்களுக்கான புக்கிங்குகள் ஓபன் ஆகியுள்ள நிலையில், படங்களை புக் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படங்களில் எவை ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடிக்கும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.