twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி லெஜண்ட் படத்தில் அப்படியொரு மேட்டர் இருக்கு.. அதனால தான பான் இந்தியா ரிலீஸ்.. ஜேடி ஜெர்ரி பளிச்!

    |

    சென்னை: லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.

    Recommended Video

    அசத்தும் The Legend Saravana அண்ணாச்சி! 800 தியேட்டர்களில் Release *Kollywood | Filmibeat Tamil

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகின்றனர்.

    200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அப்படியொர் மேட்டர் இருப்பதால் தான் இதனை பான் இந்தியா ரிலீசாக வெளியிட முடிவு செய்துள்ளோம் என இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி கூறியிருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

    இனி யாருமே தடுக்க முடியாது.. உலகம் முழுவதும் தட்டி தூக்கப்போகுது 'தி லெஜண்ட்’இனி யாருமே தடுக்க முடியாது.. உலகம் முழுவதும் தட்டி தூக்கப்போகுது 'தி லெஜண்ட்’

    லெஜண்ட் சரவணா

    லெஜண்ட் சரவணா

    மிகப்பெரிய தொழிலதிபரான லெஜண்ட் சரவணா தனது துணிக்கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா என ஆட்டம் போட ஆரம்பித்த நிலையிலேயே அவருக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை முளைத்து விட்டது. இந்நிலையில், தனது விளம்பர படங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரியை வைத்தே தி லெஜண்ட் எனும் பெயரில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார். வரும் ஜூலை 28ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.

    5 மொழிகளில்

    5 மொழிகளில்

    லெஜண்ட் சரவணா, ஊர்வசி ரவுத்தேலா, யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள தி லெஜண்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக போகிறது. அந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை படு ஸ்பீடாக நடத்தி வருகிறார். 10 நடிகைகளை வைத்து சமீபத்தில் அவர் நடத்திய இசை வெளியீட்டு விழா வேற லெவலில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

    அப்படியொரு மேட்டர்

    அப்படியொரு மேட்டர்

    சமீபத்தில் தென்னிந்திய படங்கள் எல்லாமே பான் இந்தியா படங்களாக 5 மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, விக்ரம் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்திய நிலையில், அந்த வரிசையில் தி லெஜண்ட் படமும் இடம்பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த படத்தில் யூனிவர்ஸல் கன்டென்ட் ஒன்று உள்ளது அதற்காகத் தான் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுகிறோம், நிச்சயம் அந்த விஷயம் அனைவரையும் ரீச் செய்ய வேண்டும் என லெஜண்ட் நைனைத்ததால் தான் இப்படியொரு பிரம்மாண்ட படமே உருவானது என ஜேடி - ஜெர்ரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.

    ஏகப்பட்ட நடிகைகள்

    ஏகப்பட்ட நடிகைகள்

    பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் ஒரு ஐஐடி மாணவியாக நடித்துள்ளார். சரவணன் அருள் விஞ்ஞானியாக நடித்துள்ளார். கீத்திகா திவாரி, ராய் லக்‌ஷ்மி, யாஷிகா ஆனந்த் என ஏகப்பட்ட நடிகைகள் பாடல் காட்சிகளிலும், படத்திலும் நடித்துள்ளனர். காதல், ஆக்‌ஷன், கதை, கருத்து என அனைத்தும் கலந்த பக்காவான கமர்ஷியல் படமாக இந்த படம் இருக்கும் என படத்தை இயக்கிய இயக்குநர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    The Legend movie directors duo JD Jerry opens up about why they chose Pan India release for this movie due its Universal content. Legend Saravanan will give his 100 percent effort for this movie, they told.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X