Don't Miss!
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
WWF மாதிரி பஞ்ச் பறக்குதே.. “தி லெஜண்ட்”படத்தின் மிரட்டலாக டிரைலர் அவுட் !
சென்னை : லெஜண்ட் சரவணன் நடிக்கும் "தி லெஜண்ட்"திரைப்படத்தின் மிரட்டலாக டிரைலர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், யோகிபாபு, பிரபு, நாசர், மயில்சாமி, பழம்பெரும் நடிகை சச்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா லெஜண்ட் சரவணனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
கடைசி நேரத்தில் கல்யாணம் நடக்கும் இடம் மாற இத்தனை காரணங்களா? நம்பர் நடிகை நினைச்சது நடக்கலையே!

“தி லெஜன்ட்”
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். "தி லெஜன்ட்" என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார்.

பான் இந்திய படம்
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது . அஜித், விக்ரம் நடித்த 'உல்லாசம்', ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த 'விசில்' படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இப்படத்தி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

டிரைலர் வெளியீடு
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், "தி லெஜண்ட்"திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதில், அதிரடி சண்டைகள், ரொமான்ஸ் , ஆட்டம் பாட்டம், பஞ்ச் வசனம் என டிரைலரில் சும்மா மிரட்டி இருக்கிறார் சரவணன் அருள். டிரைலர் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் டிராண்டாகி உள்ளது.
விஞ்ஞானி
சின்னக் கலைவாணர் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது என்பதால், டிரைலரில் விவேக் நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் விவேக் அவர்கள் நடித்துக்கொண்டு இருக்கும் போதே உயிரிழந்ததால், மீதி காட்சிகளை சிஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் நடித்தது போன்றே படத்தை உருவாக்கி முடித்துள்ளனர் உள்ளனர். இத்திரைப்படத்தில், சரவணன் அருள் உலகமே வியந்து பார்க்கு ஒரு விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.