கமலுடன் இணையும் அஜித் பட இயக்குநர்… இன்று மாலை அபிஸியல் அப்டேட்… எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சென்னை: கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கமல் நடிக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், கமல் நாளை தனது 68வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் 68வது பிறந்தநாள்

கமல் 68வது பிறந்தநாள்

விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நாளை (நவ 7) 68வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், கமலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ரெடியாகிவிட்டாராம்.

கமலுடன் அஜித் பட இயக்குநர்

கமலுடன் அஜித் பட இயக்குநர்

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின் படி, கமலின் அடுத்த படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை கொடுத்துள்ள ஹெச் வினோத், இப்போது துணிவு படத்தை இயக்கியுள்ளார். தொடர்ச்சியாக அஜித்தின் மூன்று படங்களை இயக்கியுள்ள ஹெச் வினோத், முதன்முறையாக கமலுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை அறிவிப்பு

இன்று மாலை அறிவிப்பு

கடந்த சில தினங்களாகவே கமல் - ஹெச் வினோத் கூட்டணி குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. ஹெச் வினோத், அடுத்து விஜய் சேதுபதியின் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து கமல் நடிக்கும் படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கமலும் அதற்குள் இந்தியன் 2 படபிடிப்பை முடித்துவிடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கமல் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி இன்று (நவ 6) மாலை 6 மணிக்கு அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கமல் தயாரிப்பில்

ராஜ்கமல் தயாரிப்பில்

கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. கமல் - ஹெச் வினோத் இணையும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாம். விக்ரம் படத்தின் பிரமாண்டமான பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உற்சாகத்தில் இருக்கும் கமல், ஹெச் வினோத் இயக்கும் படத்தையும் சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம். வினோத், கமல் இணையும் படத்தின் முழுமையான தகவல்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X