twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடிவை மீறி.. சம்பளத்தை அதிகரித்த 'மாரி 2' பட நடிகருக்கு தடையா..? தயாரிப்பாளர்கள் விளக்கம்!

    By
    |

    கொச்சி: சம்பளத்தை அதிகமாக கேட்ட 'மாரி 2' பட நடிகருக்கு தடையா? என்பது பற்றி தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    கொரோனா காரணமாக சினிமாதுறை கடந்த சில மாதங்களாக முடங்கி கிடக்கிறது.

    தயாரான படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்!தயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்!

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    பல தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளனர். தியேட்டர்கள் திறக்கப்படாததால், தயாரான திரைப்படங்களை ஒடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். முடியும் தருவாயில் உள்ள படங்களை விரைவாக முடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    குறைக்க வேண்டும்

    குறைக்க வேண்டும்

    கேரளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதை மலையாள நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டு சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

    மோகன் லால்

    மோகன் லால்

    மலையாள நடிகர் சங்க தலைவரும் ஹீரோவுமான மோகன் லால் நடிக்கும் த்ரிஷ்யம் 2 உள்பட 11 மலையாளப் படங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளன. இதில் பங்கேற்கு நடிகர், நடிகைகளின் சம்பள விவரங்களை மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டது. அதில் மோகன்லால், கொரோனாவுக்கு முன் வாங்கியதில் இருந்து பாதியாக சம்பளத்தைக் குறைத்துள்ளார்.

    டோவினோ தாமஸ்

    டோவினோ தாமஸ்

    அதே போல பல நடிகர், நடிகைகள் குறைத்துள்ள நிலையில் இளம் நடிகர்களான டோவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் அதிகமாக கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு முன் ரூ.75 லட்சம் சம்பளமாக வாங்கிய டோவினா, இப்போது ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

    தடை விதிக்க

    தடை விதிக்க

    மற்றொரு நடிகரான ஜோஜு ஜார்ஜ், தனது சம்பளத்தை ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி இருந்தார். இதனால், இவர்கள் நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுக்கவில்லை. அதிக சம்பளம் கேட்டதால் டோவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜுக்கு தடை விதிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது.

    தயாரிப்பாளர்கள்

    தயாரிப்பாளர்கள்

    இந்நிலையில், இருவரிடமும் தயாரிப்பாளர்கள் பேசினர். நடிகர் டோவினோ தாமஸ், பிராஃபிட் ஷேர் முறைக்கு சம்மதம் தெரிவித்தார். ஜோஜு ஜார்ஜ் தனது சம்பளத்தை ரூ.30 லட்சமாக குறைப்பதாகக் கூறினார். இதையடுத்து, அவர்கள் படங்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

    English summary
    The Malaiyala film producers association said actor Tovino Thomas will not be banned.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X