ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதன் பின்னணி.. பேசாமல் கண்கலங்கிய அம்மா.. பிரபலம்!

சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நேற்று பிரம்மாண்டமாக தொடங்கினார். இந்த விழாவில் பல தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டனர். இத்தனை ஆண்டு காலம் இல்லாமல் ரவி மோகன் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறது என இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான திண்டுக்கல் வெங்கடேஷ் Public Wing யூடியூப் சேனலில் அது பற்றி பேசி உள்ளார்.

இதில், இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது ரவி மோகனின் நீண்ட நாள் ஆசை, அதை அவர் நேற்று மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக தொடங்கி விட்டார். இந்த விழாவில் அவருடன் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொண்டு நாங்கள் இருக்கோம் என்று ஊக்கத்தை கொடுக்கும் வகையில் பேசினார்கள். ரவி மோகன், தற்போது பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான சர்ச்சையில் சிக்கினார். மேலும், கடனாளியாகி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டார். இனிமேல் ரவி மோகன் அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், குதிரை போல எழுத்து ஓடி அடுத்த நிலைக்கு வந்து இருக்கேன் என்றும், எனக்கு உறுதுணையாக என்னுடன் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை ஜெயம் ரவி நேற்று பேசிய பேச்சிலிருந்தே நன்றாக தெரிய வருகிறது.

Ravi Mohan Ravi mohan studio Kenisha
Photo Credit:

ரவி மோகன் : ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. பாக்யராஜ், ராஜ்கிரண், லிங்குசாமி போன்றவர்கள் எல்லாம் படத்தை தயாரித்துத்தான் கடனாளியாக ஆனார்கள். முன்பு போல தற்போது சினிமா இல்லாத நேரத்தில், ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் வருவேன் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். ரவி மோகன் இப்போது மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறார். அவரின் ஈசிஆர் பங்களாவிற்கு 10 மாதம் இஎம்ஐ கட்டாததால் அந்த பங்களா இப்போது ஜப்திக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல, தயாரிப்பு நிறுவனத்தில் முன்பணத்தை பெற்றுவிட்டு அந்த படத்திற்கு கால் சீட் கொடுக்கவில்லை என்றும் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதன் பின்னணி: இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் தான் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து தான் ஜெயம் ரவியின் அம்மா அந்த மேடையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் உடைந்து அழுதார். அந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராகவும் இருக்கலாம், இல்லை... எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாயே என்ற வருத்தத்தில் கூட கண்கலங்கி இருக்கலாம். ரவி மோகனின் அண்ணனும் பல இடத்தில் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது. எது எப்படியாக இருந்தாலும், நன்றாக இருக்கட்டும் என்று தான் அனைவரும் நினைத்துத்தான் வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரவி மோகனின் அப்பா கலந்து கொள்ளவே இல்லை என்று திண்டுக்கல் வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X