»   »  மெர்சல் பெயரை பயன்படுத்தினால் இனி என்னாகும் தெரியுமா..?

மெர்சல் பெயரை பயன்படுத்தினால் இனி என்னாகும் தெரியுமா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் தீபாவளி ரிலீஸுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Select City
Buy Mersal (U/A) Tickets

கடந்த வாரம் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த வாரம் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஒரு தீம் சாங் ஆகியவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் வியாபாரத்திற்காக பயங்கரமாகச் செலவு செய்து வருகிறது தேனாண்டாள் நிறுவனம்.


இந்நிலையில், இன்னொரு புது முயற்சியையும் செய்துள்ளது 'மெர்சல்' குழு. 'மெர்சல்' என்ற வார்த்தை அதிகம் பிரபலமாகியுள்ள நிலையில், தேனாண்டாள் நிறுவனம் 'மெர்சல்' பெயருக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் வாங்கியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு திரைப்படத்தின் பெயருக்கு இப்படி ட்ரேட்மார்க் பெறப்படுவது இதுவே முதல் முறை.


விளம்பரச் செலவு :

விளம்பரச் செலவு :

மெர்சல் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு தமிழ்ச் சொல்தான் என்றாலும், மெர்சலை ஒரு படமாக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்புக்கு ஒப்பாக இருப்பதாகவும், அந்தப் பெயரை விளம்பரப்படுத்த நிறைய செலவு செய்ததாகவும் கூறியிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.


ஆறு மாதம் ஆச்சு :

ஆறு மாதம் ஆச்சு :

இந்தத் தலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு படத்தின் சம்பந்தப்பட்ட லீகல் டிபார்ட்மென்ட் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாம். படத்தின் பெயரை ட்ரேட்மார்க் அங்கீகாரம் பெறுவதற்கான சிக்கல்களை ஒருவழியாகத் தீர்த்து வெற்றிகண்டிருக்கிறது.


ராயல்டி செலுத்தவேண்டும் :

ராயல்டி செலுத்தவேண்டும் :

ட்ரேட்மார்க் வாங்கப்பட்டுள்ளதால், இனி 'மெர்சல்' எனும் பெயரை யாரேனும் வணிகரீதியாகப் பயன்படுத்தினால் அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ராயல்டியாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டும்.


எப்படிப் பயன்படுத்தக்கூடாது ? :

எப்படிப் பயன்படுத்தக்கூடாது ? :

அதாவது 'மெர்சல்' தேங்காய் எண்ணெய் எனும் பெயரில் ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளை விற்றால் ட்ரேட்மார்க் வாங்கப்பட்ட பெயரை வணிகரீதியாகப் பயன்படுத்தியதற்காக அந்நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பங்குத் தொகையை தேனாண்டாள் நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டி இருக்கும்.


மெர்சல் கௌரவம் :

மெர்சல் கௌரவம் :

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் மெர்சல் படத்திற்காக விஜய் உருவத்தில் எமோஜியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெருமையை பெற்ற முதல் தென்னியந்தப் படம் 'மெர்சல்' தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.


English summary
As the word 'mersal' has become more popular, Thenandal films has acquired trademark recognition for the name 'Mersal'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil