கோடி கோடியா சொத்து இருக்கு.. ஆனால், சிரஞ்சீவி மகளின் சோகமான வாழ்க்கை!
சென்னை: தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிரஞ்சீவி.1978 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராக அறிமுகமான நடிகர் சிரஞ்சீவி 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி நடித்த இந்திரா, தாகூர், ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவர் நடிகராக மட்டுமின்றி 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கிய சிரஞ்சீவி திருப்பதி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
பின்பு கட்சியைக் கலைத்துவிட்டு, தற்போது மீண்டும் திரையுலகிலேயே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இவரது மகன் ராம்சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால், மெகா ஸ்டாரின் மகள் ஸ்ரீஜா தனது 19 வயதிலேயே, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். அந்த செய்தியை இப்போது பார்க்கலாம்.

19 வயதில் திருமணம்: நடிகர் சிரஞ்சீவி 1980ஆம் ஆண்டு சுரேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சுஷ்மிதா, ராம் சரண், ஸ்ரீஜா என ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் ஸ்ரீஜா, தனது 19வது வயதில்,சிறுவயது தோழர் மற்றும் காதலரான சிரிஷ் பரத்வாஜ் என்பவரை யாருக்கும் தெரியாமல், திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அதோடு மட்டுமில்லாமல், என் தந்தை சிரஞ்சீவி எங்களை பிரிக்க பார்க்கிறார். எங்களின் உயிருக்கு ஆபத்து என்று மீடியாக்கள் முன்பு பேட்டி கொடுத்தது மட்டுமின்றி காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
விவாகரத்து: இதையடுத்து, ஸ்ரீஜா மற்றும் சிரிஷ் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்க இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்த போது, சிரிஷ் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும், அடித்து துன்புருத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்பாவை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், குடும்பத்துடன் ஆதரவு இல்லாமல் எல்லா பிரச்சனைகளையும் அவரே தனியாக சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2014 ஆம் ஆண்டு சிரிஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இரண்டாவது திருமணம்: விவாகரத்துக்கு பின் ஸ்ரீஜா, ததாய் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு, கல்யாண் தேவ் என்பவருடன் திருமணம் நடந்தது. கல்யாண் தேவும் தெலுங்கில் பிரபல நடிகர் ஆவார். ஆனால், தற்போது, கல்யாணும் ஸ்ரீஜாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றார்களா என்பது தெரியவில்லை. தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகராகவும், திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு சொத்துக்கு சொந்தக்காரராகவும் இருக்கும் சிரஞ்சீவின் மகளின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக உள்ளது.


Click it and Unblock the Notifications











