twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தன்னைத் தானே செதுக்கிய மைக்கேல் ஜாக்சன்

    |

    Recommended Video

    Michael Jackson's 61st Birthday

    சென்னை: தமிழ் திரையுலகின் தல அஜித் குமார் எப்படி எந்த ஒரு பின்னணியும், பிடிமானமும் இல்லாமல் இன்று தன்னைத் தானே நிலை நிறுத்தியிருக்கிறாரோ அவரைப் போலவே மைக்கேல் ஜாக்சனும் தன்னைத் தானே செதுக்கி கொண்ட ஒரு மாஸ் ஹீரோ என்பது உண்மை.

    பாப் சிங்கர் என்றாலே நமக்கு ஆணியில் அடிச்சார் போல் கண் முன்னே வந்து நிற்பது மைக்கேல் ஜாக்சன் தான். இசை வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான பல கலைஞர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் மைகேல் ஜாக்சன். அவரின் 61வது பிறந்தநாளான நேற்று ஆகஸ்ட் 29 உலகமே அவரது பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாடியது.

    The world celebrates Michael Jacksons birthday on August 29

    அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் படு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் நினைவாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    மைக்கேல் ஜாக்சனின் ரோபோட், மூன்வாக் ஸ்டைல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இன்று அவரது ஸ்டைலை பின்பற்றாத நடன கலைஞர்களே இல்லை எனும் அளவிற்கு அவரது தாக்கம் இசையிலும் நடனத்திலும் ஒன்றிப்போய் இருக்கிறது.

    The world celebrates Michael Jacksons birthday on August 29

    எல்லையில்லா புகழும் வளர்ச்சியும் அடைந்த அவரது வாழ்கை, பல தடைக்கற்களை கடந்த பிறகே அவருக்கு கிடைத்தது. அவர் தன் திறமைகளை நிரூபிப்பதற்காக மிக சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தவர். நம் தமிழ் திரையுலகின் தல அஜித் குமார் எப்படி எந்த ஒரு பின்னணியும், பிடிமானமும் இல்லாமல் இன்று தன்னைத் தானே நிலை நிறுத்தியிருக்கிறாரோ அவரை போலவே மைக்கேல் ஜாக்சனும் தன்னைத் தானே செதுக்கி கொண்ட ஒரு மாஸ் ஹீரோவே.

    The world celebrates Michael Jacksons birthday on August 29

    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், மக்களிடையே பல்வேறு காரணங்களுக்காக கெட்ட பெயர் இருந்தாலும் அவரின் பாப் இசை மற்றும் நடனத்தில் அவரை யாரும் அடித்து கொள்ளவே முடியாது. அவரின் திரில்லர், ஹிஸ்டரி போன்ற பாடல் தொகுப்புகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அவரின் பாப் பாடலுக்கும், நடனத்திற்கும் பல ரசிகர்கள் பைத்தியமாகவே ஆகியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

    என்னா நடிப்பு... என்னா திறமை.... - சாய் பல்லவியை பாராட்டும் நந்திதா தாஸ்என்னா நடிப்பு... என்னா திறமை.... - சாய் பல்லவியை பாராட்டும் நந்திதா தாஸ்

    நமது தமிழ்த் திரையுலகின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா கூட மைக்கேல் ஜாக்சனின் மிகப்பெரிய வெறியர். அவருடைய ஸ்டைலை பிரபுதேவாவிடம் எப்போதுமே காண முடியும். இன்று நடத்தப்படும் அனைத்து நடன நிகழ்ச்சியிலும் மைக்கேல் ஜாக்சன் பாடலும் ஆடலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

    2009ஆம் ஆண்டு அவர் மாரடைப்பால் இறந்தாலும் இன்றும் என்றும் அனைவரின் நெஞ்சங்களிலும் அவர் நிலைத்திருப்பர் என்பது உண்மை.

    English summary
    It is true that Michael Jackson is a mass hero who has carved himself up just like the Tamil film industry's Ajith Kumar has established himself today without any background or fondness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X