»   »  இது தற்காலிக வாபஸ்தான்... வேறு வழியின்றி வாபஸ் பெற்ற தியேட்டர்காரர்கள்!

இது தற்காலிக வாபஸ்தான்... வேறு வழியின்றி வாபஸ் பெற்ற தியேட்டர்காரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் கடைப்பிடித்த 4 நாள் ஸ்ட்ரைக் இன்று வாபஸ் பெறப்பட்டது. இது தற்காலிக வாபஸ்தான் என்றும், கேளிக்கை வரி குறித்த நிரந்தர முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு சினிமா டிக்கெட்டுகள் மீது ஜிஎஸ்டி வரி மட்டும் 18 முதல் 28 சதவீதம் வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Theater Strike: It's a temporary withdrawn

தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத வரியை அமல்படுத்துவதா வேண்டாமா என முடிவு செய்ய அறுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிலைமையை அலசி ஆராய்ந்து ஒரு முடிவை அறிவிக்கும்.

வேறு வழியின்றி அரை மனதுடன்தான் இந்த முடிவுக்கு திரைத் துறையினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். காரணம், அரசுத் தரப்பு கடைசி வரை கேளிக்கை வரியை நீக்குவதற்கு பிடிகொடுக்கவே இல்லை. வேண்டுமானால் இப்போதைக்கு வசூலிக்க மாட்டோம். பின்னர் பார்க்கலாம் என்பதுதான் இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவு.

அரசு தரப்பில் வலியுறுத்தியபடி தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலையெல்லாம் குறைக்கப்படுமா என்பதில் இன்னும் உறுதியான பதிலை தியேட்டர்காரர்கள் தரவில்லை.

இப்போதைய நிலையை வைத்துப் பார்த்தால், தியேட்டர்காரர்கள் ஜிஎஸ்டி, கேளிக்கை வரியைச் சமாளிக்க மறைமுகமாக இன்னும் ஏகத்துக்கும் விலையை உயர்த்தப் போவது மட்டும் நிச்சயம்.

English summary
The Theatyer strike withdrawn was a temporary one and it would continue whether the entertainment tax impose on tickets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil