விஜய்யின் வாரிசு படத்தை கட்டம் கட்டிய டோலிவுட் இண்டஸ்ட்ரீ… சொன்னபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல்!

ஐதராபாத்: விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு படத்துக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் அஜித், சிரஞ்சீவி, பாலையா ஆகியோரின் படங்களும் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தை குறிவைத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பொங்கல் விருந்து

விஜய்யின் பொங்கல் விருந்து

விஜய் மாஸ் காட்ட வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே வாரிசு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 2021ல் மாஸ்டர் திரைப்படம் மூலம் ட்ரீட் கொடுத்த விஜய், 2023ம் ஆண்டு வாரிசு படத்தை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்கலாம் என நினைத்திருந்தார்.

கட்டம் கட்டிய டோலிவுட்

கட்டம் கட்டிய டோலிவுட்

வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்க, சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை வெளியிட்டு படக்குழு மாஸ் காட்டியது. தமன் இசையில் விஜய் பாடியிருந்த இந்தப் பாடல், தொடர்ந்து இரண்டு வாரங்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் வாரிசு செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தான் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை

தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை

விஜய்யின் வாரிசு படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார், வம்ஷி பைடிபள்ளி இயக்குகிறார். இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமான TFPC அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சங்கராந்தி பண்டிகை நாளில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுபோக மிச்சம் இருக்கும் திரைகளில் மட்டுமே டப்பிங் படங்ளை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் வாரிசு படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, மேலும், வசூலிலும் வாரிசுக்கு சிக்கல் தான்.

தில் ராஜூவின் முடிவு என்ன?

தில் ராஜூவின் முடிவு என்ன?

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பு விஜய்க்கும் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வாரிசு நேரடி தமிழ்ப் படம் என்றே விஜய்யும் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால், தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் வாரிசு படத்தை எப்படி ரிலீஸ் என யோசித்து வருகின்றனர். அதேநேரம் டோலிவுட்டில் தில் ராஜூ மிகப் பெரிய தயாரிப்பாளர் என்பதால், விரைவில் இந்த பிரச்சினையை சரியாக டீல் செய்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அஜித்தின் துணிவு படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாவது கஷ்டம் தான் எனக் கூறப்படுகிறது.

எல்லா பக்கமும் நெருக்கடி

எல்லா பக்கமும் நெருக்கடி

ஏற்கனவே பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு படக்குழு நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது. தமிழில் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திடீரென அறிவித்துவிட்டது. அதேபோல், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன. கெட்டதிலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பிரபாஸின் ஆதிபுருஷ் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியது மட்டுமே. தமிழ், தெலுங்கு என இருபக்கங்களும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகவுள்ளது, வாரிசு படத்தின் வசூலை குறைத்துவிடும் என தயாரிப்பாளர் தில் ராஜு கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X