For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இருக்கு இன்னைக்கு ரெட் கார்டு இருக்கு..பிக்பாஸ் வீட்டில் வச்சு செய்யப்போகும் கமல்

  |

  பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏதோ தர்மத்துக்கு உள்ளே வந்ததுபோல் உள்ளே செயல்படுவது அதிகம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

  பிக்பாஸ் போட்டியாளர்கள் செயல்பாட்டில் உள்ள அலட்சியத்தை கடந்த வாரம் கமல்ஹாசன் கடுமையாக கண்டித்திருந்தார்.

  ஆனாலும் தங்கள் செயலை மாற்றிக்கொள்ளாமல் செயல்படுகின்றனர் இந்த வாரம் இது அதிகமாக இருந்ததால் கமல் கடுமையாக கண்டிப்பார் என தெரிகிறது.

  பிக்பாஸ் வீட்டுக்குள் கோஷ்டி சேர்க்கும் அமுதவாணன்..அன்பு டீம் லீடர் இவரா?..கதறும் அசீம்,ஏடிகே,விக்ரமபிக்பாஸ் வீட்டுக்குள் கோஷ்டி சேர்க்கும் அமுதவாணன்..அன்பு டீம் லீடர் இவரா?..கதறும் அசீம்,ஏடிகே,விக்ரம

   பிக்பாஸ் வீட்டில் போடப்படும் கண்டிஷன்கள்

  பிக்பாஸ் வீட்டில் போடப்படும் கண்டிஷன்கள்

  பிக்பாஸ் வீட்டுக்கு வருபவர்கள் அதன் கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு கொடுத்த பின்னரே வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப சம்பளம் அளிக்கப்படுகிறது. இது தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் கடைசியில் தரப்படும். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் காலங்களில் அவரவர் நடத்தையை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கும் பேரை கெடுத்துக்கொள்பவர்கள் உண்டு, நல்ல பெயருடன் செல்பவர்களும் உண்டு.

   பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலே பிரபலம் தான், வருமானம் தான்

  பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலே பிரபலம் தான், வருமானம் தான்

  நல்ல பெயரோ கெட்ட பெயரோ பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டால் அவர் மிகவும் பிரபலமாகி விடுவார். நெகட்டிவ் கமெண்ட்ஸ் கூட அவர்களுக்கு சாதகமாகவே அமையும். மேல்தட்டு வர்க்கத்திலிருந்து வந்துவிட்டு போலித்தனத்துடன் உலா வருபவர்கள் எப்படி மாறுகிறார்கள், சோம்பேறித்தனம், சுத்தம் பேணுதல், சக மனிதரை மதிப்பது, சுயநலம் என பல குணாதிசயங்கள் வெளிப்படுகிறது. இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் ரகசியம் பேசக்கூடாது, மைக் எப்போதும் மாட்டியிருக்க வேண்டும், வீட்டுக்குள் பகலில் தூங்கக்கூடாது என்கிற விதி உண்டு.

   சம்பளம் கொடுக்கிறோம் கடுமையாக கண்டித்த கமல்ஹாசன்

  சம்பளம் கொடுக்கிறோம் கடுமையாக கண்டித்த கமல்ஹாசன்

  எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் மைக்கை கழற்றி வைப்பது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, சன்னமான குரலில் ரகசியம் பேசுவது, வேறு மொழியில் பேசுவது, இரவு 2 மணி 3 மணிவரை அரட்டை அடித்துவிட்டு பகலில் ஒளிந்துக்கொண்டு தூங்குவது, வீட்டுப்பொருட்களை போட்டு உடைப்பது, டாஸ்க் ரிஸ்க் எடுப்பது போல் இருந்தால் அதில் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்குவது, சுத்தமாக செயல்படாமல் ஒதுங்கியே வாழ்வது என பலவித நடவடிக்கைகளை கமல்ஹாசன் லேசாக சொல்லிப் பார்த்தார், மதிக்காததால் கடந்தவாரம் கடுமையாக சொல்லிவிட்டார்.

   ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றுவேன் எச்சரித்த கமல்

  ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றுவேன் எச்சரித்த கமல்

  உங்களுக்கு இங்கே சம்பளம் தரப்படுகிறது. இங்கு இருக்கும்போது பிக்பாஸ் கண்டிஷனுக்கு உட்பட்டு நடக்கணும், சும்மா சுற்றிக்கொண்டு இருக்க அனுமதிக்க முடியாது, வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, மைக்கை போடாமல் இருப்பது, பிக்பாஸ் அழைத்தால் கூட வருவதில்லை என அலட்சியம் தொடர்கிறது. இதற்கு நானே ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிடுவேன் என எச்சரித்தார். நேற்றும் சொன்னபடி வராமல் அலட்சியம் செய்ததால் உங்களுடன் ஜாலியாக பேசுவதால் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் இனி பேச மாட்டேன் என பிக்பாஸ் கடுமையாக சொன்னார்.

   கமல் ஹாசன் கண்டித்தும் அலட்சியமாக அதையே செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

  கமல் ஹாசன் கண்டித்தும் அலட்சியமாக அதையே செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

  இந்நிலையில் இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் வருவார். கடந்த வாரம் அவர் சொன்ன எதையும் பிக்பாஸ் வீட்டில் யாரும் கடைபிடிக்கவில்லை. மைக் போடுவதில் அலட்சியம், தூங்குவதில் அதே நடைமுறை, ரகசியம் பேசுவது, கூடிப்பேசுவது, பகலில் ஒளிந்துக்கொண்டு தூங்குவது ( ஜனனி பாத்ரூம் ஏரியாவில் தூங்கியதை பலரும் சொன்னார்கள்) உடல்நிலை சரியில்லை என பொய்க்காரணம் சொல்லி டாஸ்க்கில் பங்கேற்காமல் ஒதுங்குவது (பல நாள் இந்த வேலையை செய்த ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் சிக்கினார்) என பல காரணங்கள் அப்படியே தொடர்கிறது.

   ரெட்கார்டு கொடுப்பாரா கமல்..மிக்சர் பார்ட்டிகள் அட்ராசிட்டி

  ரெட்கார்டு கொடுப்பாரா கமல்..மிக்சர் பார்ட்டிகள் அட்ராசிட்டி

  இந்தவாரம் இதை பிக்பாஸ் கடுமையாக கண்காணித்துள்ளனர். அதனால் கமல்ஹாசன் இந்த வாரம் இதை கடுமையாக சொல்லி எச்சரிப்பார் என தெரிகிறது. மிக்சர் பார்ட்டிகளை கடந்த வாரமே எச்சரித்தார்..ஆனால் அவர்கள் அதேபோன்று இருந்துக்கொண்டு தங்களுக்காக சில பிஆர்களை செட்பண்ணிக்கொண்டு கண்ணில் படாமல் வாழ்வது இந்த வாரமும் தொடர்கிறது. கதிரவன், நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, குயின்சி போன்றோர் எதையும் செய்யாமல் கோஷ்டியில் வாழ்ந்துக்கொண்டு எவிக்‌ஷனிலும் சிக்காமல் வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்த வாரமும் மிக்சர் கொடுக்க போகிறாரா கமல் பார்ப்போம். ஒன்று நிச்சயம் இன்று ரெட்கார்டு கூட கொடுக்கும் அளவுக்கு கமல் போகலாம். பார்ப்போம்.

  English summary
  Bigg Boss contestants are getting criticized for doing as if they are in some kind of without salary worker. Last week, Kamal Haasan had strongly condemned the negligence of Bigg Boss contestants in the process. However, they are doing without changing their actions, because this week it was too much, so it seems that Kamal will rebuke him severely.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X