»   »  அன்பு அன்பானவர், பண்பானவர், பாசமானவர், அவர் இல்லாமல் சினிமா இல்லை: கலைப்புலி தாணு

அன்பு அன்பானவர், பண்பானவர், பாசமானவர், அவர் இல்லாமல் சினிமா இல்லை: கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil
அன்பு அன்பானவர், பண்பானவர்-கலைப்புலி தாணு- வீடியோ

சென்னை: அன்பு என்பவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர், நேசமானவர். அவர் இல்லாமல் சினிமா இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

பைனான்ஸியர் அன்புச்செழியனால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து கலைப்புலி தாணு கூறியிருப்பதாவது,

அன்பு

அன்பு

அசோக் குமார் தெய்வமானதில் பழியும் பாவமும் அன்புச்செழியன் குடும்பம் மீது விழுந்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் அதிர்ந்திருக்கிறோம். காரணம் அன்பு என்னும் ஒற்றை சொல் அந்த பெயர் சொல்லக்கூடிய தம்பி இந்த திரையுலகத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் நாங்கள் எல்லாம் இல்லை.

அழிவு

அழிவு

அன்பு இல்லை என்றால் சிறு பட தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்தே போவார்கள். மாரீஸ் ஹோட்டலில் லிங்குசாமி படம் ரஜினிமுருகன். அன்பு தம்பி உட்கார்ந்து தான் அத்தனை பேரையும் அழைத்து யார் யார் பணம் கொடுத்திருந்தார்களோ கிட்டத்தட்ட ரூ. 25 கோடி பணத்தை பகிர்ந்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார்.

மதுரை

மதுரை

உத்தமன் ரிலீஸானபோது அவர் மதுரையில் இருந்தார். அவருக்கு போன் செய்ததும் பிளைட்டை பிடித்து வந்தார். சாலையோரத்தில் அவரிடம் பிரச்சனையை சொன்னோம். அந்த பட ரிலீஸுக்கு உதவி செய்தார்.

பைனான்ஸ்

பைனான்ஸ்

நான் பெரிய படங்களும் பண்ணியிருக்கேன், சின்ன படங்களும் பண்ணியிருக்கேன். பண்ணின அத்தனை படங்களுக்கும் அந்த தம்பி தான் பைனான்ஸ். கபாலி ரிலீஸாகி இரண்டு நாட்கள் கழித்து தான் அன்புக்கே பணம் தந்தேன்.

தம்பி

தம்பி

எந்த நேரத்தில் சென்றாலும் என்ன அண்ணன் என்ன செய்ய வேண்டும் என்று இப்படித் தான் அந்த தம்பி கேட்கும். அப்படிப்பட்ட ஒரு தம்பிக்கு இப்படிப்பட்ட ஒரு பழியா? ரொம்ப ரொம்ப வேதனையாக உள்ளது. இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்திருக்கலாம். நாங்கள் எத்தனையோ பிரச்சனைகளை தீர்த்திருக்கிறோம்.

பிரச்சனை

பிரச்சனை

ஏதாவது ஒரு படம் அன்புவால் நின்றிருக்கிறதா, சத்தியமாக கிடையாது. நெற்றிப் பொட்டு சத்தியமா கிடையாது. அப்படிப்பட்ட தூய்மையான மனிதரை போட்டு ஏன் இப்படி பிரச்சனை செய்கிறார்கள், சித்ரவதை செய்கிறார்கள். இதற்கு பின் ஏதோ காரணம் இருக்கிறது.

கடிதம்

கடிதம்

காவல் துறைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அந்த கடிதத்தை படிங்க, அதில் ஆயிரம் பொருள் உள்ளது. அதை படித்து உணர்ந்தால் உண்மை தெரியும். பைனான்ஸியர்கள் 30, 40 சதவீதம் தான் பணம் தருவார்கள். அது ஹீரோவின் சம்பளத்திற்கு போய்விடும். மீதமுள்ள பணத்தை அந்த புண்ணியவான், கன்னியவான் அன்பு கொடுக்கிறார். அன்பு இல்லை என்றால் நடிகர்களால் படம் எடுக்க முடியாது.

கஷ்டம்

கஷ்டம்

தங்கமகன் நஷ்டமானபோது ஸ்ரீகிரீன் தம்பியை கூப்பிட்டு ரூ. 2 கோடி தள்ளுபடி செய்தார். அப்படிப்பட்ட ஒரு தம்பியை பழிப்பது ரொம்ப கஷ்டமாக உள்ளது. தம்பி, எந்த சூழலிலும் இந்த திரையுலகை விட்டு நீங்கள் ஒதுங்கிவிடக் கூடாது. உனக்கு நாங்கள் இருக்கிறோம் தம்பி.

போகாதே

போகாதே

தயவு செய்து இந்த சூழலால் திரையுலகை விட்டு சென்றுவிடாதீர்கள். நீ ஒதுங்கினால் சினிமா இல்லை. அன்பு என்பவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர், நேசமானவர். அசோக் குமாரின் குடும்பத்திற்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் என்றார் தாணு.

English summary
Producer Kalaipuli S. Thanu said that financier Anbu Chezhiyan is a kind hearted person who is ready to help people any time. Thanu has requested Anbu Chezhiyan not to ditch the film industry because of the current scenario. Thanu added that there is no film industry without Anbu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil