twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த சீனுக்கு டூப்போ ரோப்போ பயன்படுத்தல.. விஜயகாந்த் டெடிகேஷனை புகழ்ந்த அருணா குகன்!

    |

    சென்னை: ஏவிஎம் நிறுவனத்தின் பொறுப்பை தற்போது முழுமையாக ஏற்று நடத்தி வருகிறார் அருணா குகன். சமீபத்தில் சிவாஜி வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அந்தளவுக்கு கொண்டாட இவர் தான் மூலக் காரணம் என்கின்றனர்.

    விரைவில் பழையபடி ஏவிஎம் மூலம் புதிய படங்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வரும் அருணா குகன், நடிகர் விஜயகாந்த் செய்த ஸ்டன்ட் சாதானை குறித்த அறியப்படாத தகவல்களை போட்டோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

    உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் விஜயகாந்த் ஒரு காலத்தில் எப்படி சிங்கமாக கோலிவுட்டையே கட்டி ஆண்டார் என்பதற்கு இந்த புகைப்படங்களும் வீடியோவும் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே என அவரது ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர்.

    மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்.. நலமுடன் இருப்பதாக தகவல்! மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்.. நலமுடன் இருப்பதாக தகவல்!

    மீண்டும் ஏவிஎம்

    மீண்டும் ஏவிஎம்

    தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கோலோச்சி வந்த ஏவிஎம் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய பெரிய படங்களை தயாரிக்காமல் இருந்து வந்தது. ஏவிஎம் நிறுவனத்தை தற்போது அருணா குகன் தான் எடுத்து நடத்தி வருகிறார். சமீபத்தில் சிவாஜி 15 ஆண்டுகளை ஆனதை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்தை ஏவிஎம் சரவணன் உடன் சென்று சந்தித்து இருந்தார். தொடர்ந்து ஏவிஎம் படைத்த சாதனைகளை சமூக வலைதளங்களில் இன்றைய ரசிகர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பதிவிட்டு வருகிறார்.

    சேதுபதி ஐபிஎஸ் மணிக்கூண்டு சீன்

    ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா, நம்பியார், கவுண்டமணி மற்றும் செந்தில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சேதுபதி ஐபிஎஸ். 1994ல் வெளியான இந்த படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற மணிக்கூண்டு காட்சி ரசிகர்களை அப்பவே பிரம்மிக்க வைத்தது. இந்நிலையில், அந்த காட்சிக்கு பின்னணியில் இருந்த ரகசியங்களையும் ஆச்சர்யங்களையும் கூறி உள்ளார் அருணா குகன்.

    டூப்பும் இல்லை ரோப்பும் இல்லை

    உயரமான இடத்தில் இருந்து ஸ்டன்ட் செய்யும் காட்சிகளுக்கு நடிகர்களுக்கு உடம்பில் ரோப் போட்டு இருப்பார்கள், அவர்கள் கீழே விழாமல் பாதுகாப்பாக இருக்க, மேலும், அப்படியே அவர்கள் கீழே விழும் பட்சத்தில் அவர்களை தாங்கிப் பிடிக்க பஞ்சு மெத்தைகளையும் பல அடுக்கு அடுக்கி வைத்துத் தான் பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால், இந்த காட்சியில் விஜயகாந்த் டூப்பே போடாமல் நடித்தார் என்றும், அந்த காட்சியை ரோப் டெக்னிக்கையும் பயன்படுத்தாமலும் எடுத்தார்கள் என்றும் விஜயகாந்தின் டெடிகேஷன் பற்றி என் தாத்தா எனக்கு சொன்னார் என அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளது.

    விஜயகாந்த், மீனா

    விஜயகாந்த், மீனா

    சேதுபதி ஐபிஎஸ் படத்தின் காட்சியை குறிப்பாக இப்போ அருணா குகன் வெளியிட என்ன காரணம் என்றும், சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் நீரிழிவு நோய் காரணமாக அவரது விரல் நீக்கப்பட்டது மற்றும், நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில், சரியான நேரத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த சேதுபதி ஐபிஎஸ் படக் காட்சி குறித்து போட்டு டிரெண்டிங்கில் இடம் பெறுகிறாரா அருணா குகன் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர். கூடிய சீக்கிரமே ஏவிஎம் தயாரிப்பில் பிரம்மாண்ட படம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    AVM Producer Aruna Guhan tweeted, "On popular request, #AVMTrivia from Sethupathi IPS. There was no rope-technique used and Thatha has spoken of Vijayakanth sir’s commitment and passion to execute scenes and fights without a stunt double. This scene on the clock tower had audiences gripped."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X