twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெறி... என்ன சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள்?

    By Shankar
    |

    தெறி படம் இன்று காலைதான் இந்தியாவில் வெளியானது. ஆனால் வெளிநாடுகள் சிலவற்றில் ஒரு நாள் முன்பாகவே வெளியாகிவிட்டது.

    படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அது குறித்து சமூக வலைத் தளங்களில் கருத்துகளை, விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

    Theri audience opinions

    'தெறி படம் முதல் பாதி வழக்கமான படங்களைப் போல இருந்தாலும், இரண்டாம் பாதி பிரமாதமாக உள்ளது,' என்று துபையில் படம் பார்த்த ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

    கமல்ஜி என்ற ரசிகர், "வழக்கமான போலீஸ் - பேமிலி பழிவாங்கும் கதைதான். பெரிய பட்ஜெட் சீரியல் மாதிரி உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜாலிப் படம்

    தெறி மிக ஜாலியான படம். இடைவேளை வரை நேரம் போவதே தெரியவில்லை. மக்களை மகிழ்விக்கும் வகையிலான ஆக்ஷன் காட்சிகள், சென்டிமென்ட். நைனிகா நடிப்பு சூப்பர். - இது ஒரு ரசிகரின் கமெண்ட்.

    விஜய்க்காக..

    படத்தை தனி ஒரு ஆளாக தூக்கிச் சுமக்கிறார் ஹீரோ விஜய். ஆக்ஷன் காட்சிகளில் உண்மையிலேயே தெறி மாஸ். விஜய்க்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம், என்கிறார் காலையில் படம் பார்த்த இன்னொரு ரசிகர்.

    சத்ரியன் சாயல்

    நேர்மையான போலீஸ் அதிகாரி, அவரது அழகான குடும்பம்... இந்தக் குடும்பத்தை வில்லன்கள் சிதைக்க, மகளுடன் விஜய் தலைமறைவு வாழ்க்கை.. என சத்ரியன் கதை சாயல் (சாமி, இப்போது வந்த சேதுபதியும்கூட இப்படித்தானே) இந்தப் படத்திலும் உள்ளதாக சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    விதவிதமாக கருத்துக்கள் இருந்தாலும், இன்று தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட ரசிகர்களுக்கு ஏற்ற சாய்ஸ் தெறி என பெரும்பான்மையோர் கருத்துக் கூறியுள்ளனர்.

    English summary
    Here are few opinions on Vijay's Theri from audiences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X