»   »  தெறி முதல் வார வசூல் எவ்ளோ தெரியுமா?

தெறி முதல் வார வசூல் எவ்ளோ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான தெறி படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் ததமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான படம் தெறி.


1500 அரங்குகள்

1500 அரங்குகள்

இந்தப் படம் உலகெங்கும் 1500 அரங்குகளில் வெளியானது. விஜய்யைப் பொருத்தவரை இந்தப் படத்துக்குதான் அதிகபட்ச அரங்குகள்.
வரவேற்பு

வரவேற்பு

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நான்கு தினங்களில் மட்டும் ரு 30 கோடிக்கு மேல் இந்தப் படத்து வசூல் கிடைத்ததாக கூறப்படுகிறது.


சென்னையில்

சென்னையில்

சென்னை நகரில் மட்டும் ஒரே நாளில் ரூ 1 கோடியை இந்தப் படம் ஈட்டியதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.


முதல் வாரம்...

முதல் வாரம்...

முதல் வார நிலவரப்படி தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து இந்தப் படம் ரூ 45 கோடியை வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.


செங்கல்பட்டு ஏரியா இல்லாமலேயே..

செங்கல்பட்டு ஏரியா இல்லாமலேயே..

செங்கல்பட்டு, திருவள்ளூர் ஏரியாக்களில் இப்படம் திரையிடப்படாவிட்டாலும், இப்படத்தின் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியா தியேட்டர்களைப் பொருத்தவரை தெறி வெளியாகாதது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


English summary
Vijay's Theri has collected Rs 45 cr worldwide on its first week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil