»   »  தெறி முன்பதிவு... ஒரு மாதத்துக்கு முன்பே ஆரம்பித்த சத்யம்!

தெறி முன்பதிவு... ஒரு மாதத்துக்கு முன்பே ஆரம்பித்த சத்யம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது சத்யம் சினிமாஸ். இது தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்துள்ள படம் தெறி. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.


மார்ச் 20-ல்...

மார்ச் 20-ல்...

இந்தப் படத்தின் இசை இன்னும் ஐந்து நாட்களில் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரைலர் இணையத்தில் கலக்கிக் கொண்டுள்ளது.


ஏப்ரல் 14

ஏப்ரல் 14

வரும் ஏப்ரல் 14-ம் தேதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.


முன்பதிவு

முன்பதிவு

வழக்கமாக படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும்போதுதான் முன்பதிவை அறிவிப்பார்கள். ஆனால் தெறி படத்தைப் பொறுத்தவரை, படத்தின் வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவை அறிவித்துள்ளனர்.


சத்யம் சினிமாஸ்

சத்யம் சினிமாஸ்

படம் வெளியாகவிருக்கும் முக்கிய மல்டிப்ளெக்ஸ்களில் ஒன்றான எஸ்பிஐ சினிமா (சத்யம்) நேற்றே படத்துக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டது. இது தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டாகும்.


ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய்யின் ரசிகர்களுக்கு இது மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது. படத்தை முதல் நாளில் பார்த்துவிடும் ஆவல் கொண்டவர்கள் சென்னை மற்றும் கோவையில் உள்ள எஸ்பிஐ சினிமா அரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.


English summary
The advance booking for Vijay's Theri movie has been started a month before the movie's release!
Please Wait while comments are loading...