»   »  தெறி டீசர்: இணையத்தில் 1 கோடி ஹிட்ஸ்களைக் கடந்து சாதனை

தெறி டீசர்: இணையத்தில் 1 கோடி ஹிட்ஸ்களைக் கடந்து சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியான தெறி டீசர், இணையத்தில் இதுவரை 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. தணிக்கையில் யூ சான்றிதழைப் பெற்ற இப்படம் வருகின்ற 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


Theri Teaser Crossed 1 Crore Views

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தின் டீசர், தற்போது இணையத்தில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.


ஏற்கனவே வெளியான குறைந்த நேரத்தில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்த முதல் டீசர், முதல் நாளில் அதிக பார்வை மற்றும் லைக்குகள் பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையை தெறி தக்க வைத்துள்ளது.


மேலும் இந்தியளவில் அதிக லைக்குகள் பெற்ற முதல் டீசராகவும் தெறி திகழ்வது குறிப்பிடத்தக்கது.


இதுவரை 2,96,645 பேர் இந்த டீசரை தங்களுக்குப் பிடித்திருப்பதாக லைக் செய்துள்ளனர். அதேநேரம் 55,189 இந்த டீசர் தங்களைக் கவரவில்லை என்று டிஸ்லைக் செய்திருக்கின்றனர்.


தற்போது விஜய் ரசிகர்கள் #10millionviewsfortheriteaser என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

English summary
Vijay's Theri Teaser now Crossed 1 Crore Views in YouTube.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil