»   »  பிப் 5-ம் தேதி விஜய்யின் தெறி டீசர்!

பிப் 5-ம் தேதி விஜய்யின் தெறி டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துவிட்டது என்றாகிவிட்டது விஜய் ரசிகர்களுக்கு. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் ட்ரைலர் தீபாவளிக்கு வெளியாகும், புத்தாண்டுக்கு வெளியாகும், பொங்கலுக்கு வெளியாகும் என்றெல்லாம் கூறி வந்தனர். ரசிகர்களும் பெரும் எதிர்ப்பார்ப்பிலிருந்தனர்.

ஆனால் டீசர் வெளியானபாடில்லை. குடியரசு தினமான ஜனவரி 26-ல் கண்டிப்பாக வெளியாகும் என்றார்கள். வெளியாகவில்லை.


Theri teaser on 5th Feb

இப்போது அந்த டீசர் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 5-ம் தேதி இந்த டீசர் வெளியாகவிருக்கிறதாம்.


50 வினாடிகள் கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான டீசர்களின் சாதனையை தெறி டீசர் முறியடிக்கும் என்கிறார்கள்.


பிப்ரவரி மாதம் இறுதியில் இப்படத்தின் பாடல்களும், ஏப்ரல் 14ம் தேதி படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

English summary
The first teaser of Vijay's Atlee directed Theri will be released on Feb 5th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil