»   »  வெளியானது தெறி டீசர்... இணையத்தை அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்!

வெளியானது தெறி டீசர்... இணையத்தை அதிர வைக்கும் விஜய் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தெறி படத்தின் முதல் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியானது.

போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜயகுமார் ஐபிஎஸ் என்னும் போலீஸ் வேடத்தில் விஜய் நடித்திருப்பதால் டீசர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது.


மேலும் இதற்கு முன் வெளியான டீசர்களின் வரலாற்றை முறியடித்து மிக வேகமாக 1 லட்சம் லைக்குகளை தெறி டீசர் பெற்றிருப்பதால் சமூக வலைதளங்களில் #fastest100ktherilikes என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தற்போது தெறிக்க விட்டு வருகின்றனர்.


ரசிகர்களின் பதிவுகளில் இருந்து ஒருசிலவற்றை இங்கே காணலாம்.


சொல்றதை விட

"எங்களுக்கு சொல்றதை விட செய்றதுதான் பிடிக்கும்" என்று கத்தி பட விஜய் ஸ்டில்லை பதிவிட்டு கூறியிருக்கிறார் விக்ரம்.


எல்லா ரெக்கார்டுகளையும்

"தெறி டீசர் இதற்கு முன் வெளியான அனைத்து டீசர்களின் ரெக்கார்டுகளையும் முறியடித்து விட்டது வாழ்த்துக்கள் தலைவா" என்று விஜய்யை வாழ்த்தியிருக்கிறார்.தெறி கனி.


தளபதி என்ட்ரி

"டீசர்ல தளபதி என்ட்ரியே தனி மாஸ்தான்" என்று புகழ்ந்திருக்கிறார் குணா.


புலிக்குப் பின்னர்

"புலியில் ஏற்பட்ட சிறிய பின்னடைவுக்குப் பின்னர் 'தெறி'க்கும் டீசரில் விஜய் மீண்டு வந்திருக்கிறார். தல ரசிகர்கள் சார்பாக அவரை வாழ்த்துகிறோம்" என்று டீசர்+விஜய்யை சேர்த்து வாழ்த்தியிருக்கிறார் முஹம்மது.
எங்க ஹீரோயின்

"இந்த டீசர்ல எத்தனை பேரு கவனிச்சீங்க 2 ஹீரோயின்ல ஒருத்தரு கூட இல்லாம டீசர் முழுக்க விஜய் மட்டுமே இருக்கறத. விஜய்யோட நடிப்புத் திறமையில ஹீரோயின் இல்லாததையே நாம மறந்துட்டோம்" என்று டீசரை கவனித்துக் கூறியிருக்கிறார் வெரோனிகா.


English summary
Vijay-Atlee's 50 second Theri Teaser Released Yesterday Midnight. Now This Teaser Trending in All Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil