»   »  தெறி ஆடியோவுடன் வெளியாகும் டிரெய்லர்... விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தெறி ஆடியோவுடன் வெளியாகும் டிரெய்லர்... விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெறி டிரெய்லரை ஆடியோவுடன் சேர்த்து வெளியிடப் போவதாக கூறுகின்றனர்.

விஜய், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 20 ம் தேதி, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது.இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய்,டி.ராஜேந்தர், தேவா என்று மொத்தம் 13 பாடகர்கள் இப்படத்திற்காக பாடியுள்ளனர்.


தெறி டீசர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், 2 நிமிடம் ஓடக்கூடிய டிரெய்லரை படக்குழு வெளியிடவுள்ளது.இதன் மூலம் ஒரே நாளில் பாடல்கள்+ டிரெய்லர் என இரட்டை விருந்தை விஜய் தனது ரசிகர்களுக்கு கொடுக்கப் போகிறார்.


கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?


English summary
Theri Trailer Release date now Revealed. The Makers Decided Release the Movie Trailer along with Audio.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil