»   »  தெறி அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனை!

தெறி அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள தெறி படத்தின் அமெரிக்க உரிமையை ரூ 3 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

விஜய் படத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனையாகும். இதுவரை அவர் நடித்த படங்களில், அமெரிக்க உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள படம் தெறிதான்.


Theri US rights sold out for Rs 3 cr

ரஜினியின் கபாலி, சூர்யாவின் 24 படங்களை வெளியிடும் சினி கேலக்சி நிறுவனம்தான் தெறி படத்தையும் வெளியிடுகிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் கபாலியை ரூ 8.5 கோடிக்கு வாங்கியுள்ளது.


விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்ஸன் நடித்துள்ள இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியிடுகிறார் கலைப்புலி தாணு.

English summary
The US distribution rights of Vijay’s Atlee directed Theri have been sold for a record 3cr to Cine Galaxy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil