ஏசிபி அர்ஜுன் நாளை முதல் வருகிறார்...வலிமை FDFS பார்க்க போகும் பிரபலங்கள் யார் யாருன்னு தெரியுமா?
சென்னை : வலிமை படம் நாளை அதிகாலை ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து, படத்தில் அஜித்தின் கேரக்டர் பேருடன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் போனி கபூர். பார்த்து விட்டு, பிரபலங்கள் பலரும் தாங்கள் வலிமை டிக்கெட் வாங்கி விட்டதாகவும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க உள்ளதாகவும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அஜித் நடித்து வலிமை படம் நாளை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இரண்டாவது ஷோ 7 - 7.30 மணிக்கு துவங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் 7 மணிக்கு தான் முதல் ஷோவே திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை மணிக்கு திரையிட்டாலும் முதல் ஆளாக வலிமை பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பாகுபாடில்லாமல் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வலிமை ரன்னிங் டைம்
வலிமை படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை மொத்தம் இரண்டு மணி நேரம் 59 நிமிடங்கள் ஓடுகிறதாம். இதில் ஃபஸ்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 33 நிமிடங்களும், செகண்ட் ஆஃப் ஒரு மணி நேரம் 26 நிமிடங்களும் ஓடுகிறதாம். இதனால் நான்ஸ்டாப்பாக அடுத்தடுத்த ஷோக்கள் திரையிடப்பட உள்ளனவாம்.

ஏசிபி அர்ஜுன் வருகிறார்
இதற்கிடையில் வலிமை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரிங்களில் நடத்தப்பட்டுள்ளது. தனது பங்கிற்கு தயாரிப்பாளர் போனி கபூர் தினம் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு வருகிறார். உச்சகட்ட ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் போனி கபூர். இதன் தொடர்ச்சியாக நேற்று அஜித்தின் கேரக்டரின் பெயர் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஏசிபி அஜித் தான்
அதிரடி போலீஸ் ஏசிபி அர்ஜுன் பிப்ரவரி 24 முதல் தியேட்டர்களில் உங்களை சந்திக்க வருகிறார் என்ற வாசகத்துடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் காக்க காக்க ஏசிபி அன்புச்செல்வன், சத்ரியன் ஏசிபி பன்னீர்செல்வம், வேட்டையாடு விளையாடு ஏசிபி ராகவன் ஆகியோர் வரிசையில் ஏசிபி அர்ஜுன், தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவில் அழுத்தமான இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். வலிமை முதல் நாள் முதல் ஷோவை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, திரைபிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வலிமை FDFS பார்க்க போகும் பிரபலங்கள்
பிரபலங்கள் பலர் வலிமை FDFS டிக்கெட் வாங்கியதை மிக சந்தோஷமாக தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். நேற்று டைரக்டர் வெங்கட் பிரபு தான் வலிமை FDFS டிக்கெட் வாங்கியதாக கூறியிருந்தார். தம்பி பிரேம்ஜியையும் கூட்டிகிட்டு போப்பா என செல்ல சண்டை போட்டிருந்தார் கங்கை அமரன். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அருண் விஜய், ஷிவானி நாராயணன், பவித்ர லட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வலிமை டிக்கெட் வாங்கி விட்டதாகவும், படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர ஏற்கனவே ஃபஸ்ட் காப்பியை பார்த்திருந்தாலும், ரசிகர்களின் ஆரவாரத்துடன் தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க போனி கபூர், ஹெச்.வினோத், கார்த்திகேயா போன்றோர் திட்டமிட்டுள்ளனர். அஜித்தின் அண்ணன் அனில் குமாரும் வலிமை பார்க்க வர போகிறாராம். ஆனால் எந்த தியேட்டரில் தாங்கள் படம் பார்க்க போகிறோம் எனறபதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











