»   »  விஜய்யின் புலி படத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

விஜய்யின் புலி படத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் புலி பட ட்ரெய்லரை யூடியூப்பில் 34 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த டிரெய்லரை யூடியூப்பில் 34 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ட்ரெய்லரே இப்படி அதிருதே படம் எப்படி இருக்கும் என நீங்களே நினைத்துப் பாருங்கள் என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.


இந்நிலையில் படத்தில் இருந்து என்னென்ன எதிர்பார்க்கலாம் என்று பார்ப்போம்.


ஃபேன்டஸி

ஃபேன்டஸி

விஜய் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார். தற்போது தான் அவர் முதன்முறையாக ஃபேன்டஸி கதையில் நடித்துள்ளார். போர் வீரன் போன்ற உடையில் கையில் வாளுடன் விஜய் கொடுத்துள்ள போஸ் பலரையும் கவர்ந்துள்ளது. படத்தில் புதிய விஜய்யை எதிர்பார்க்கலாம்.


ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 20 ஆண்டுகள் கழித்து நடித்துள்ள தமிழ் படம் புலி. கதாநாயகியாக ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரீதேவி தற்போது புலி படத்தில் வில்லியாக வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆக்ஷன்

ஆக்ஷன்

காதலும், ஆக்ஷனும் கலந்த படமாக புலி இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். ட்ரெய்லரில் விஜய் காற்றில் பாய்ந்து சிறுத்தையுடன் போராட வரும் காட்சி உள்ளது. படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். டிரெய்லரில் விஜய், ஸ்ருதி இடையேயான கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளது. படத்திலும் அவர்கள் காதலிப்பதை பார்க்க ஆவலாய் உள்ளனர் ரசிகர்கள்.


விஜய்

விஜய்

டிரெய்லரில் நீளமான முடி வைத்துள்ள விஜய், வழக்கமான ஹேர்கட் வைத்துள்ள விஜய்யை பார்த்தோம். அவர் குள்ளமான உருவத்திலும் வருவதாக கூறப்படுகிறது. மூன்று விஜய் என்றால் ரசிகர்களின் சந்தோஷத்தை பற்றி கூறவா வேண்டும்.


பனி, புலி

பனி, புலி

பாசத்திற்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி நான் புலி என்று டிரெய்லரில் விஜய் கூறுகிறார். இந்நிலையில் படத்தில் அனல் பறக்கும் பல வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Puli trailer has become a huge hit among the fans. Above are the things fans are expecting from their Ilaya Thalapathy's movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil