»   »  சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு

சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நதியா நடித்துள்ள திரைக்கு வராத கதை படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் துளசிதாஸ் இயக்கியுள்ள படம் திரைக்கு வராத கதை. இந்த படத்தில் பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ஒரு ஆண் கூட கிடையாது. நதியா, இனியா, ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.

Thiraiku Varatha Kathai faces issue in censor board

பெண்ணும் பெண்ணும் சேரும் லெஸ்பியன் உறவு குறித்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விடுதியில் தங்கி நர்ஸ் வேலை செய்யும் இரு பெண்களிடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

Thiraiku Varatha Kathai faces issue in censor board

திருமணம் செய்ய அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது ஒரு கொலை நடக்கிறது. கொலையை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரியான நதியா. லெஸ்பியன் என்பதால் இரு பெண்கள் நெருக்கமாக உள்ள காட்சிகள் உள்ளன.

Thiraiku Varatha Kathai faces issue in censor board

தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் தர மறுத்தனர்.

பின்னர் அந்த நெருக்கமான காட்சிகளில் சிலவற்றுக்கு கத்தரிபோட்டுவிட்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். நெருக்கமான காட்சிகளில் ஆபாசம் தலைதூக்கியிருப்பதாகக் கூறி இந்த சான்றிதழாம்.

English summary
Nadhiya's Thiraiku Varatha Kathai has faced issues when it was sent to censor board for certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil